/indian-express-tamil/media/media_files/2025/02/08/7cgYtboVGM7dS0n0Z3uD.jpg)
வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனையால் ஏற்படும் வாயு தொல்லைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைகளுக்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு குடல் சரியாக சுருங்கி வேலை செய்யாத காரணத்தினால் கழிவுகளை வெளியேற்ற முடியவில்லை. இவை மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. சிலருக்கு இவை சீராக இயங்காத போது வாயுத்தொல்லையுடன் வெளியேற்றப்படுகிறது என மருத்துவர் கார்த்திகேயன் விவரித்துள்ளார்.
இதனை irritable bowel syndrome எனக் கூறுகிறார்கள். உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிற்து என மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். எனினும், இப்பிரச்சனை தீவிரமாக இருந்தால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு முழுமையாக வயிற்றில் இருந்து கழிவுகளை வெளியேற்றிய உணர்வு இருக்காது. அதிகப்படியான எடை இழப்பு, இரவு நேரத்தில் அடிக்கடி வயிற்றுப் போக்கு, இரத்தக் கசிவு ஏற்படுதல், வயிற்று வலி ஆகியவை இதற்கான அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
தசை சரியாக இயங்காமல் இருத்தல், நரம்பு மண்டல பாதிப்பு, தொற்று நோய், மன அழுத்தம், குடலில் பாக்டீரியா இருந்தால் irritable bowel syndrome ஏற்படுக் கூடும் என மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார். கோதுமை, பால் பொருட்கள், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள், முட்டைகோஸ் ஆகிய உணவுகளை சாப்பிடும் போது இப்பிரச்சனை அதிகமாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் இவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் சாப்பிடுவது, தண்ணீர் சரியான அளவில் குடிப்பது, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், சீரான தூக்கம் போன்றவற்றை பின்பற்றும் போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.