மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி என்பது இதய தமனி ஒன்றில் ஏற்படும் அடைப்பை குறிக்கிறது.
மாரடைப்புக்கு முன்னதாக சில அறிகுறிகள் ஏற்படுகின்றன என இதயவியல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கண்காணிப்பது அவசியமாகிறது. உடல் நமக்கு அறிவிக்கும் இந்த எச்சரிக்கைகளை நாம் கவனத்துடன் அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என மும்மை மசினா மருத்துவமனையின் சர்வதேச இதயவியல் மருத்துவர் ருசித் ஷா கூறினார்.
Advertisment
மாரடைப்பு என்றால் என்ன?
மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி என்பது இதய தமனி ஒன்றில் ஏற்படும் அடைப்பை குறிக்கிறது. அதாவது இதயத்தில் திடீரென ஏற்படும் அடைப்பினால் இதயம் செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதற்கு முன் சில அறிகுறிகள் உடலில் தோன்றும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், மாரடைப்புக்கு முன்னர் உடலில் பல இடங்களில் வலியை அனுபவிக்கலாம். இடது அல்லது வலது தோல் பட்டையில் வலி ஏற்படலாம். அல்லது, இடக்கை, வலக்கை வயிற்றின் மேல்பகுதி, தாடை, கழுத்தின் பின்புறம் தோள்பட்டை வலி தோன்றலாம். இந்த வலி கன்னம் முதல் தொப்புள் வரை கூட தொடரலாம் என்று டாக்டர் ஷா, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சில வகையான முதுகுவலி மட்டுமே இதயத் தடுப்புக்கான குறிகாட்டிகளாகும் என்று பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டிஎம் கார்டியாலஜி டாக்டர் சுதீப் கே என் கூறினார். மேலும், “மேல் முதுகு வலி, தோள்பட்டை வலி அல்லது புதிய முதுகு வலி ஆகியவற்றுடன் தொடர்புடையது. கூடுதலாக, வியர்வை, சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய முதுகுவலியானது மாரடைப்பின் அசாதாரண அறிகுறிகளாகும், இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இதயத் தடுப்புக்கு வழிவகுக்கும்” என்றார்.
மற்றொரு மருத்துவர் கானின் கூற்றுப்படி, கடுமையான மேல் முதுகுவலி மார்பு அல்லது கைக்கு பரவுவது வரவிருக்கும் மாரடைப்புக்கான சரியான அறிகுறியாக இருக்கலாம். இதில், மாரடைப்புக்கு முன்னும் பின்னும் ஏற்படும் முதுகுவலியைப் புகாரளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறியிருக்கிறது” என்றும் கான் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சுட்டிக் காட்டினார்.
கடுமையான முதுகுவலி இரண்டு இதய நிலைகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று மும்பையின் குளோபல் ஹாஸ்பிடல்ஸ் பரேலின் மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் பிரவீன் குல்கர்னி கூறியுள்ளார். “ஒரு சில நோயாளிகள் கடுமையான முதுகுவலியுடன் இருக்கும் மார்பு வலியை அனுபவிக்கின்றனர்” என்றும் தெரிவித்தார்.
திடீர் மாரடைப்பு
இதற்கிடையில், கூடுதலாக, கடுமையான முதுகுவலி பெருநாடி துண்டிப்பில் வெளிப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான உயர் இரத்த அழுத்தம் பெருநாடி ஹீமாடோமாவையும் ஏற்படுத்தும், எனவே அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு விரைவில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர் குல்கர்னி தெரிவித்தார்.
அறிகுறிகள் ஏற்பட்டால் என்ன செய்வது?
“மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒருவருக்கு தென்பட்டால் அவர் ECG, ECHO, TMT போன்ற சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதில் தாமதமோ உதாசீனமோ கூடாது.
வழக்கமான உடல் பரிசோதனைகள் மற்றும் பிற தடுப்பு சுகாதார நடவடிக்கைகள், அவ்வப்போது இரத்த அழுத்த சோதனைகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் செய்வது நல்லது. இது இதயப் பிரச்னைகளை தடுக்கவும், உடலில் உள்ள ஆபத்து காரணிகளை வெளிக்கொண்டுவரவும் உதவும்” என்று மருத்துவர் குல்கர்னி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“