/indian-express-tamil/media/media_files/2025/09/02/pre-diabetes-2025-09-02-17-47-30.jpg)
ப்ரீ-டயாபடீஸ்: 30 நாட்களில் குணப்படுத்த முடியுமா? மருத்துவர்கள் மருத்துவர்கள் தரும் வழிகாட்டுதல்கள்!
ப்ரீ-டயாபடீஸ் பாதிப்பை அலட்சியமாக எடுத்துகொள்ள கூடாது. இது முக்கியமான எச்சரிக்கை அறிகுறி என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். "இது உங்கள் உடல் கொடுக்கும் சிவப்பு எச்சரிக்கை. இன்சுலின் எதிர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறி. எவ்வளவு சீக்கிரம் செயல்படுகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக அதன் விளைவுகள் இருக்கும்" என்று டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குனர், டாக்டர் பங்கஜ் ஷர்மா வலியுறுத்தினார்.
ப்ரீ-டயாபடீஸ் என்றால் என்ன?
ப்ரீ-டயாபடீஸ் என்பது, உங்கள் ரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது. ஆனால், அது இன்னும் நீரிழிவு நோய்க்கான அளவுக்கு உயரவில்லை என்பதைக் குறிக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், சரியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம், ப்ரீ-டயாபடீஸை ஒரு மாதத்திற்குள் கூட குணப்படுத்த முடியும் என டாக்டர் ஷர்மா தெரிவித்தார்.
சிகிச்சை முறைகள்:
உணவு கட்டுப்பாடு: முதல் மற்றும் முக்கியமான படி, உணவுப் பழக்கத்தை சரிசெய்வதுதான். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைடிரேட், சர்க்கரை உணவுகள், வறுத்த நொறுக்குத் தீனிகள் மற்றும் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, முழு தானியங்கள், புதிய காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளைச் சாப்பிடுங்கள். ஒவ்வொரு உணவும் உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்காமல், நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று டாக்டர் ஷர்மா அறிவுறுத்துகிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
உடல் உழைப்பு: தினசரி 30-45 நிமிடங்கள் வேகமாக நடப்பது, சைக்கிளிங் அல்லது நீச்சல் போன்ற பயிற்சிகளைச் செய்யுங்கள். வாரத்திற்கு 2 முறை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் என டாக்டர் நிமித் நங்டா கூறினார். தினமும் 45 நிமிடங்களுக்கு குறைந்தது 5 முறை உடற்பயிற்சி செய்வதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
உறக்கம் & மன அழுத்த மேலாண்மை: மோசமான தூக்கம் மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகரித்து, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மோசமாக்கும். யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு பயிற்சிகளைப் பின்பற்றும் நோயாளிகளுக்கு விரைவான முன்னேற்றம் தெரிவதாக டாக்டர் ஷர்மா குறிப்பிட்டார்.
உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்: விரத சர்க்கரை அளவு, உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு மற்றும் உடல் எடையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உங்கள் உடல் எடையில் 5-7% குறைப்பு கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.
டாக்டர் ஷர்மாவின் மருத்துவ அனுபவத்தின்படி, ஒழுக்கமான நடைமுறை, கவனத்துடன் கூடிய உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், 30 நாட்களுக்குள் சர்க்கரை அளவை சாதாரண நிலைக்கு கொண்டு வர முடியும். ப்ரீ-டயாபடீஸ் என்பது ஒரு வாய்ப்பின் சாளரம் போன்றது. அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவ வழிகாட்டுதலுடன், அதை குணப்படுத்துவது மிகவும் சாத்தியம் - நீங்கள் நினைப்பதை விட வேகமாக என்று டாக்டர் ஷர்மா கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.