scorecardresearch

கீறல் விழுந்த முட்டையை சாப்பிட்டால் ஆபத்தா? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க!

முட்டையின் ஓட்டில் கீறல் விழுந்திருந்தால் அதை சாப்பிடலாமா? இல்லை சாப்பிடக் கூடாதா? முட்டை பற்றின சந்தேகங்களுக்கு டயட்டீஷியன் கூறும் விளக்கம் குறித்து இங்கு பார்க்கலாம்.

கீறல் விழுந்த முட்டையை சாப்பிட்டால் ஆபத்தா? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க!

முட்டையில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. முட்டை தினத்தோறும் சாப்பிடலாம். அவ்வளவு நன்மைகள் உள்ளன. முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்நிலையில், கீறல் விழுந்த முட்டையை சாப்பிடலாமா? இல்லை சாப்பிடக் கூடாது என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு டயட்டீஷியன் விளக்கம் அளித்துள்ளார்.

பறவைகள் ஒரே இடத்தில் முட்டை இடுகிறது. அங்கேயே மலம் கழிக்கிறது. அதாவது சால்மோனெல்லா போன்ற உணவு மூலம் பரவும் நோய்க்கிருமிகள் முட்டை ஓடுகளில் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஷெல்லில் விரிசல் இருந்தால், பாக்டீரியா உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. அதனால், வெடிப்பு ஏற்பட்ட முட்டைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெடிப்பு உள்ளது ஆனால், கசிவு இல்லை.. இப்போது என்ன செய்வது?

கசிவு இல்லாமல் வெடித்த முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது என்று கூறுவது அர்த்தமல்ல. சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் முட்டையில் உள் இருக்க வாய்ப்புள்ளது.

கடையில் இருந்து வாங்கி வரும் வழியில் முட்டை விரிசல் அடைந்தால் என்ன செய்வது?

முட்டைகள் மென்மையானவை. சில சமயங்களில் இவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சமயங்களில் விரிசல் விழுந்த முட்டையை உடனடியாக சமைத்து சாப்பிடுவது உகந்தது. மேலும், முட்டை ஷெல்லிலிருந்து அகற்றி, ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அல்லது அவற்றை freezer-safe container இல் வைத்து பயன்படுத்தலாம்.

சேதமடைந்த முட்டையை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

கீறல் விழுந்த அல்லது விரிசல் உள்ள முட்டைகளை சாப்பிடும் போது குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 4 முதல் 7 நாட்கள் வரை இந்த முட்டையை வைத்து உட்கொள்வது பாதிப்புகளை ஏற்படுத்தும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு Food poison ஏற்படலாம். மருத்துவமனை செல்லும் நிலைக்கும் செல்லலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Is it safe to eat an egg with a small crack in the shell