Is it safe to have sex after covid 19 vaccine Tamil News : கொரோனா தடுப்பூசி டோஸ் குறித்து ஏராளமான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு என்னவெல்லாம் செய்யலாம் எதெல்லாம் செய்யக்கூடாது என்பதும் இதில் அடங்கும்.
கோவிட் தடுப்பூசி பெற்ற பிறகு ஒருவர் உடலுறவு கொள்ளலாமா என்ற கேள்வி சமூக ஊடகத்தில் சமீபத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.
சுகாதார அமைச்சகம் இது குறித்து முறையான எந்த வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை என்றாலும், மருத்துவ நிபுணர்கள், ஆண்களும் பெண்களும் தங்களின் இரண்டாவது டோஸை பெற்ற பிறகு கருத்தடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
“SARS-CoV2-ஐ நடுநிலையாக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் தடுப்பூசி. இருப்பினும், தடுப்பூசியின் நீண்டகால பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா மேட்டரும் உடலுறவில் ஈடுபட்டால் அது அந்த ஆணையும் பெண்ணையும் பாதிக்கிறதா என்பதை இந்த குறைந்த காலகட்டத்தில் சொல்வது எளிதல்ல. தடுப்பூசி போடப்பட்ட ஒருவர் உடலுறவிலிருந்து விலகுவது எப்போதும் சாத்தியமில்லை” என்று காஜியாபாத்தின் கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் மருத்துவர் தீபக் வர்மா நம்மிடம் கூறினார்.
எப்படியிருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில், "தடுப்புதான் சிறந்த பாதுகாப்பு" என்று மருத்துவர் வலியுறுத்தினார். “ஆண்களும் பெண்களும் ஆணுறை போன்ற கருத்தடைகளை இரண்டாவது டோஸ் பெற்ற பிறகு குறைந்தது 2 முதல் 3 வாரங்களுக்குப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் உடலுறவின் போது உடல் திரவங்கள் தொடர்பு கொள்கின்றன” என்று மேலும் எச்சரித்தார்.
மேலும், "தடுப்பூசிகள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்பது நமக்குத் தெரியாது என்பதால், ஆணுறை பயன்படுத்துவது மிகச் சிறந்த மற்றும் செலவு குறைந்த தடுப்பு" என்கிறார். தடுப்பூசிக்குத் தகுதியான பெண்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil