உடல் எடை அதிகரிப்பால் விவாகரத்து எண்ணிக்கை என்கின்ற நிலை அவசியமற்றது - ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே - அதிக உடல் பருமன் என்பது பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படாது என அறுவை சிகிச்சையால் அதிக உடல் பருமனை குறைத்த சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி.
புது நம்பிக்கையுடன் புத்துணர்ச்சியுடன் ரேம்ப் வாக் செய்து அசத்திய - அறுவை சிகிச்சையில் அதிக உடல் பருமன் எடையை குறைத்த ஆண்கள் மற்றும் பெண்கள் மாறி வரும் உணவு பழக்கம் செயலற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது உடல் உடல் பருமன் ஆண்கள் பெண்களிடையே அதிகரித்து வருகின்றது.
/indian-express-tamil/media/post_attachments/c9b46c9c-7e7.jpg)
இந்நிலையில் உடல் எடையை குறைக்கும் வகையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை குறித்த விழப்புணர்வும் அதிகரித்து வருகின்றது.
கோவையில் உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண்கள்,பெண்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல சின்னத்திரை நடிகை லட்சுமி கலந்து கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.
/indian-express-tamil/media/post_attachments/c8fe1213-34d.jpg)
அதிக உடல் பருமன் அறுவை சிகிச்சை குறித்து எதுவும் அச்சம் கொள்ள வேண்டாம் முதலில் எதிர்மறை எண்ணங்களை நம்மிடம் உருவாக்கி அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்ற எண்ணத்தை தோன்றச் செய்யும் - ஆனால் நான் முழு நம்பிக்கையுடன் தைரியத்துடன் அதிக உடல் பருமன் அறுவை சிகிச்சையை செய்து கொண்டேன் தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தவர் தற்போதுள்ள கால சூழ்நிலையில் ஆண் பெண் தம்பதியர்கள் உடல் அதிக பருமன் உள்ளதால் விவாகரத்து என்ற நிலை அவசியமற்றது எனவும் தம்பதியர்களுக்கிடையே புரிதல் இருந்தாலே போதுமானது எத்தகைய இன்னல்களையும் கடந்து விடலாம் என கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/cf0287bd-4e1.jpg)
தொடர்ந்து நிகழ்ச்சியில் சுமார் 100 கிலோவு"க்கு மேல் இருந்த ஒவ்வொருவரும் தங்கள் உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு தங்கள் தோற்றத்தின் மாறுபாடு மற்றும் ஆரோக்கியம் குறித்து பேசினர்.முன்னதாக ஒவ்வொருவரும் மேடையில் ரேம்ப் வாக் நடந்து அசத்தினர். இதில் உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கலந்து கொண்டு உடல் எடை குறைத்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு மற்றவர்களையும் ஊக்கப்படுத்தினர்.உடல் பருமன் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்வாக நடைபெற்ற இதில் தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“