ரோஸ் மேரி சேர்த்த அழகு சாதன பொருட்கள், தொடர்பாக சமீபத்தில் அதிக விளம்பரங்கள் வருகின்றன. இந்நிலையில் ரோஸ் மேரி, நமது கூந்தலை வளர்க்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் சிலர் இது முடியை நன்றாக வளர்ப்பதாக கூறுகின்றனர். இது மைக்ரோ கேபில்லரி பெர்பியூஷன் அதாவது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் புதிய முடி வளரும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் பேக்டீரியாவிற்கும் எதிராகவும் , ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை கொண்டது.
மேலும் ரோஸ் மேரி ஒரு நிச்சயம் கூந்தல் வளர்ச்சி உதவுதாக எந்த வலுவான ஆய்வுகளும் இல்லை என்றும் சில ஆய்வு இதழில் மட்டும் அதற்கான சிறிய அளவில் தகவல் இடம் பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. சமூவலைதளத்தில் இது அதிகமாக பேசப்படுகிறது.
மேலும் உங்களுக்கு தேவைபட்டால் ரோஸ் மேரி எண்ணெய்யை குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தலையில் போடலாம்.
இதுபோல ரோஸ் மேரி எண்ணெய் மற்றும் ஆபிள் சிடர் வினிகரை சேர்த்து தலைக்கு போடலாம். தொடர்ந்து முடியை கழுவலாம். இதுபோல அலோவேரவிடன் சேர்த்து ஹேர் மாஸ்க் போடலாம். ரோஸ் மேரி எண்ணெய், ஜொஜொபா எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் போடலாம். மேலும் நாம் பயன்படுத்தும் எண்ணெய்யில் இதை சேர்க்கலாம். 6 மாதங்களில் நல்ல மாற்றம் ஏற்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“