Advertisment

அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பார்ப்பதால் பக்கவாதம் ஏற்படுமா? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சி தகவல் என்ன?

பெரும்பாலான வேலை செய்யும் பெரியவர்களும் குழந்தைகளும் வேலைக்காகவோ அல்லது கல்விக்காகவோ நீண்ட நேரம் திரையில் ஒட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நம்மை தள்ளிவிட்டது" என்று தொற்றுநோயை மருத்துவர் குற்றம் சாட்டுகிறார்.

author-image
WebDesk
New Update
அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பார்ப்பதால் பக்கவாதம் ஏற்படுமா? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சி தகவல் என்ன?

இப்போதெல்லாம், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால், அவர்கள் தங்களது நாளை கேஜெட்டுடன் தொடங்கி, அதனுடனே முடிக்கிறார்கள். காலையில் கண்களைத் திறக்கும் தருணத்திலிருந்து, தொலைபேசிகளை ஸ்க்ரோல் செய்வது, மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, சமூக ஊடகங்களைப் பார்ப்பது  என நாம் தொழில்நுட்பத்தை மிகவும் சார்ந்து இருக்கிறோம்,

Advertisment

ஆனால், இந்த வாழ்க்கை முறை நம் ஆரோக்கியத்திற்கு என்ன செய்கிறது என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷனின் ஸ்ட்ரோக் இதழில் (Stroke Journal) வெளியிடப்பட்ட 2021-இல், 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களிடம் நடத்திய ஆய்வில், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பவர்களை விட அதிக நேரம் ஒளிரும் திரைகளை பார்ப்பது மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை வாழ்பவர்கள் பக்கவாதத்திற்கு ஆளாகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக பக்கவாதம் அமைப்பின் (WSO) தரவுகள், நான்கில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பக்கவாதம் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்று கூறுகிறது.

தி லான்செட் குளோபல் ஹெல்த் (The Lancet Global Health) பற்றிய சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் தொற்று அல்லாத நரம்பியல் கோளாறுகளின் பங்களிப்பு 1990 இல் 4.0 சதவீதத்திலிருந்து 2019 இல் 8.2 சதவீதமாக இருமடங்காக உயர்ந்துள்ளது, இதில் ஸ்ட்ரோக் முன்னணியில் உள்ளது.

அதிகரித்த திரை நேரம் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதாக ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உஜ்வல் யோல் கூறுகிறார். ஒருவரின் ஆயுட்காலம் டிஜிட்டல் திரையின் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 22 நிமிடங்கள் வரை குறைகிறது என்பதை அமெரிக்க ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு நபரை பக்கவாதம் மற்றும் பல்வேறு இதய நோய்கள், புற்றுநோய் போன்றவற்றுக்கு ஆளாக்குகிறது. மற்றொரு UK அடிப்படையிலான ஆய்வு, டிஜிட்டல் திரைகளில் (லேப்டாப், டிவி, செல்போன் போன்றவை) தொடர்ந்து 2 மணிநேரம் பார்ப்பதால், பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கணிசமாக அதிகமாக இருப்பதாகக் காட்டியது. சமூக வலைதள போதைக்கு அடிமையான நிலையில் இரண்டு மணிநேரத்திற்கு அதிகமாக டிஜிட்டல் திரைகளை பார்ப்பதால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

பெரும்பாலான வேலை செய்யும் பெரியவர்களும் குழந்தைகளும் வேலைக்காகவோ அல்லது கல்விக்காகவோ நீண்ட நேரம் திரையில் ஒட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நம்மை தள்ளிவிட்டது" என்று தொற்றுநோயை மருத்துவர் குற்றம் சாட்டுகிறார்.

இளம் தலைமுறையினர் தங்கள் மொபைல் திரையிடனுன் ஓட்டுவது அபத்தமானது, இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. திரைகளில் இருந்து வெளிவரும் நீல ஒளி, மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கிறது, இது சரியான நேரத்தில் தூங்கி எழுவதை கடினமாக்குகிறது" என்று டாக்டர் யோல் கூறுகிறார்.

இத்தகைய வாழ்க்கை முறை, உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நிலைகள் போன்ற பிற நோய்களுக்கு ஒரு நபரை ஆளாக்குகிறது. இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருமடங்கு உள்ளது, ஏனெனில் சேதமடைந்த இரத்த நாளங்கள் இஸ்கிமிக் பக்கவாதத்தின் தொடக்கத்தை துரிதப்படுத்துகின்றன. உடல் உறுப்புகளில் (இதயம் அல்லது மூளை போன்றவை) இரத்தத்தின் குறைபாடு.

உயர் எல்டிஎல் (LDL-கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள்) தமனிகளில் தடை உருவாக்கத்தைத் தொடங்குகிறது. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது, இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது.

ஏறத்தாழ 50 சதவீத இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாகும், இது ரத்தக்கசிவு பக்கவாதம்(மூளை இரத்தக்கசிவு) அபாயத்தை அதிகரிக்கிறது.

மருத்துவர் சில வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைக்கிறார்:

உடல் உழைப்பின்மையால் ஏற்படும் தீய விளைவுகளைத் தவிர்க்க தினமும் ஒரு மணி நேர நடைப்பயிற்சி அவசியம்.

தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

உங்கள் திரை நேரத்தை வரம்பில் வைக்கவும் மற்றும் வேலையில் இருந்து அடிக்கடி ஓய்வு எடுக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment