ஜான்வி கபூர் தேன், தயிர், வாழைப்பழத்தை கலந்து அதை முகத்திற்கு பயன்படுத்துகிறார். இந்நிலையில் இதை நாமும் பயன்படுத்தலாமா ?என்ற கேள்வி எழும்.
இந்நிலையில் இதை டாக்டர் பந்த், இதன் நன்மைகள் மற்றும் இது மற்றவர்களுக்கு சரிபட்டு வருமா என்பதை சொல்கிறார். ஜான்வி கபூர் ஒரு சின்ன பாத்திரத்தில் தயிர்,தேன், வாழைப்பழத்தை சேர்த்து கலந்து முகத்தில் போட்டுக் கொள்கிறார். தொடர்ந்து ஆரஞ்சை நறுக்கி. விதைகளை மட்டும் நீக்கி, அதை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவுகிறார்.
இதைத்தொடர்ந்து கண்களுக்கு கீழாக பாதாம் எண்ணெய்யை தடவிக்கொள்கிறார். இந்நிலையில் இதில் தயிர், தேன், வாழைப்பழம் வரை கலந்து பயன்படுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது.
ஆனால் ஆரஞ்சை பயன்படுத்துவது சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கண்களுக்கு கிழே மட்டும் இல்லாமல் முகம் முழுவதும் பாதாம் எண்ணெய் தடவலாம் என்று கூறப்படுகிறது.
தேன் – இது சருமத்தை மிரதுவாக்கும். இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் முகப்பருக்களை உருவாக்கும் பேக்டீரியாவிற்கு எதிராக செயல்படும். மேலும் வீக்கத்தை குறைக்கும்.
வாழைப்பழம்- இதில் வைட்டமின் சி, பொட்டாஷியம், வைட்டமின் இ உள்ளது. இதில் உள்ள என்சைம் இறந்த செல்களை நீக்கும். சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்தும்.
தயிர்- இதில் லாக்டிக் ஆசிட் உள்ளது. இது சருமத்திற்கு இளமையான தோன்றம் கொடுக்க உதவும். மேலும் இதுவும் சருமத்தை மிரதுவாக்கும்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“