நமது வீடுகளின் மிகவும் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒரு பொருளான மஞ்சள் முகத்திற்கு தரும் அழகைப் பற்றிய சிறப்பு தொகுப்பு.
இன்றைய பெண்களுக்கு மஞ்சல் என்பது வெறும் சமையலில் சேர்க்கக் கூடிய ஒரு பொருளாக தான் தெரிகிறது. ஆனால், முந்தைய காலக்கட்டத்தில் பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் முதல் இடம் மஞ்சளுக்கு தான்.
கிருமி நாசினியில் செயல்படுவது தொடங்கி, உடல் அழற்சியை தடுத்தல், காயங்களுக்கு மருந்தாகுதல், முகப்பருக்களை விரட்டுதல் என மஞ்சளின் மகிமைகள் ஏராளம். சமையலில் மசாலா பொருட்களின் மன்னன் என்றுகூட மஞ்சளை அழைக்கலாம். அவ்வளவு மருத்துவ குணங்கள் அதில் நிறைந்துள்ளன.
இளமை:
முகத்தில் சிறுவயதிலேயே சுருக்கம் ஏற்படாமல் தடுக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது. தோல் விரைவில் தளர்ந்துவிடாமலும் தடுக்கிறது.
எண்ணெய் சருமம்:
சில பெண்களுக்கு முகத்தில் அதிகப்படியான எண் சுரப்பிகளால் எண்ணெய் முகம் போல காட்சியளிக்கும். பல பெண்கள் இதை அதிகம் விரும்புவதில்லை. அவர்கல் தினமும் இரவும், தேனுடன் சேர்த்து மஞ்சளை தடவ வேண்டும்.
முகப்பருக்கள்:
முகப்பருக்களை போக்குவதில் மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. பருக்கள், வெடிப்புகள் மட்டுமல்லாமல், முகத்தில் ஏற்படும் பள்ளங்கள், உடலில் ஆங்காங்கே சிவப்பு திட்டுகள் ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் மஞ்சளுக்கு உள்ளது.
அலர்ஜி:
சிலருக்கு சோப்புகளை மாற்றி பயன்படுத்தினாலோ அல்லது புதிய உணவை சாப்பிட்டாலோ அலர்ஜி போன்று முகத்தில் சிவப்பு பருக்கள் தோன்றும். அப்படி பட்டவர்கள் மஞ்சளும் சிறிதளவு வேப்பிலை கலந்து முகத்தில் தடவி 2 நிமிடங்களில் கழுவ வேண்டும்.