பாத்ரூம் உப்பு கறை படிந்து அசிங்கமா இருக்கா? வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்… பளிச்சென மாற்றலாம்!
கெமிக்கல் எதுவும் கலக்காமல், பல நாள் படித்திருக்கும் உப்பு கறையை பாத்ரூமில் இருந்து நீக்குவதற்கு ஒரு எளிமையான பயனுள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
கெமிக்கல் எதுவும் கலக்காமல், பல நாள் படித்திருக்கும் உப்பு கறையை பாத்ரூமில் இருந்து நீக்குவதற்கு ஒரு எளிமையான பயனுள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
பாத்ரூம் உப்பு கறை படிந்து அசிங்கமா இருக்கா? வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்… பளிச்சென மாற்றலாம்!
பெரும்பாலும் உப்பு தண்ணீர் புழக்கத்தில் இருக்கக் கூடிய எல்லோர் வீட்டிலும் பாத்ரூமில் உப்பு கறை படிந்திருக்கும். அந்த கறை பார்ப்பதற்கு ரொம்ப அசிங்கமாக இருக்கும். இந்த உப்பு கறையை போக்குவதற்கு பல கெமிக்கல் கலந்த ஆசிட் உள்ளது. ஆனால், அந்த ஆசிட்டை தொடர்ந்து பாத்ரூமில் பயன்படுத்த முடியாது. நமது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. கெமிக்கல் கலக்காமல், பல நாள் படித்திருக்கும் உப்பு கறையை பாத்ரூமில் இருந்து நீக்குவதற்கு ஒரு எளிமையான பயனுள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா (Baking Soda)
சலவைத் தூள் ( 2 ஸ்பூன்)
ஹார்பிக் (1 ஸ்பூன்)
செய்முறை:
Advertisment
Advertisements
சிறிதளவு பேக்கிங் சோடாவுடன், 2 ஸ்பூன் சலவைத் தூள் கலந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் ஹார்பிக் கலந்து பேஸ்ட் போல உருவாக்க வேண்டும். இந்த பேஸ்ட் உடன் சிறதளவு தண்ணீர் சேர்த்து உப்பு கறை படிந்த டைல்ஸ், குழாய்கள், மற்றும் கண்ணாடிப் பகுதிகளில் தடவவும். பிறகு, ஸ்ப்ரே பாட்டிலில் வினிகரை நிரப்பி, பேக்கிங் சோடா பேஸ்ட்டின் மீது ஸ்ப்ரே செய்யவும். நுரைத்துப் பொங்கும். இது கறைகளை உடைக்க உதவுகிறது. சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடவும். பிறகு, ஒரு பிரஷ்ஷைக் கொண்டு அந்த இடங்களை நன்றாகத் தேய்க்கவும். நன்றாகத் தேய்த்த பிறகு, அந்த இடத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைக்கவும். இது புதிய கறைகள் படிவதைத் தடுக்கும்.
உங்களுடைய கைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சுவாச பிரச்னையும் ஏற்படாது. அதேசமயம் மிக சுலபமான முறையில் உப்பு கறையானது நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது