கேஸ் ஸ்டவ் கம்மியா எரியுதா? வீட்டிலேயே 5 நிமிடத்தில் சரி செய்யலாம்; சிம்பிள் டெக்னிக்!

உங்கள் கேஸ் அடுப்பில் தீ குறைவாக எரிகிறதா அல்லது ஒழுங்கற்று இருக்கிறதா? இதற்கு பொதுவாக 2 முக்கிய காரணங்கள் இருக்கலாம். இந்த எளிய டிப்ஸ் பின்பற்றி நீங்களே சரிசெய்து கொள்ளலாம்.

உங்கள் கேஸ் அடுப்பில் தீ குறைவாக எரிகிறதா அல்லது ஒழுங்கற்று இருக்கிறதா? இதற்கு பொதுவாக 2 முக்கிய காரணங்கள் இருக்கலாம். இந்த எளிய டிப்ஸ் பின்பற்றி நீங்களே சரிசெய்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Gas stove cleaning (1)

கேஸ் ஸ்டவ் கம்மியா எரியுதா? வீட்டிலேயே 5 நிமிடத்தில் சரி செய்யலாம்; சிம்பிள் டெக்னிக்!

உங்கள் கேஸ் அடுப்பில் தீ குறைவாக எரிகிறதா அல்லது ஒழுங்கற்று இருக்கிறதா? இதற்கு பொதுவாக 2 முக்கிய காரணங்கள் இருக்கலாம். இந்த எளிய டிப்ஸ் பின்பற்றி நீங்களே சரிசெய்து கொள்ளலாம்.

Advertisment

1. பர்னரை சுத்தம் செய்தல்: சமையல் செய்யும் போது பால், டீ, சாதம் போன்றவை பொங்கி பர்னரில் படிந்து அடைப்பை ஏற்படுத்தலாம். இதனால் தீயின் வேகம் குறையலாம். முதலில் கேஸ் சிலிண்டரை அணைக்கவும். கேஸ் ஸ்டாண்ட் மற்றும் பர்னர்களை அகற்றவும். பாத்திரத்தில் பர்னர்களைப் போட்டு, சிறிது பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு (அல்லது வினிகர்) சேர்க்கவும். பழைய டூத் பிரஷ் ஒன்றைப் பயன்படுத்தி பர்னர்களில் உள்ள ஓட்டைகளையும், அதன் மேற்பரப்பையும் நன்கு தேய்த்து சுத்தம் செய்யவும். பின்னர், பர்னர்களை நன்கு தண்ணீரில் அலசி, ஈரப்பதம் இல்லாமல் துடைத்து, நன்கு உலர விடவும். முடிந்தால் சிறிது நேரம் வெயிலில் காய வைக்கலாம்.

2. கேஸ் ஸ்டவ் குழாய் அடைப்பை நீக்குதல்: அடுப்பின் முன்பகுதி எவ்வளவு சுத்தமாக இருந்தாலும், சமைக்கும் போது பொங்கும் பொருட்கள் அடுப்பின் பின்புறம் உள்ள கேஸ் வரும் குழாயின் நுழைவாயிலில் அடைப்பை ஏற்படுத்தலாம். கேஸ் சிலிண்டரை அணைத்த பின்னரே இதைச் செய்ய வேண்டும். கேஸ் அடுப்பைத் திருப்பி, பர்னர்களுக்கான குழாய் இணைப்புப் பகுதியைப் பாருங்கள். அந்தக் குழாயின் நுழைவாயிலில் சிறிய துளை இருக்கும். ஒரு மெல்லிய ஊசி (Safety pin) அல்லது மெல்லிய கம்பியை எடுத்து, அந்த துளைக்குள் விட்டு, மெதுவாக உள்ளே இருக்கும் அடைப்பை நீக்க முயற்சிக்கவும். ஐந்து முதல் ஆறு முறை இதைச் செய்யும்போது உள்ளே உள்ள அழுக்கு நீங்கும்.

முக்கிய குறிப்பு: இந்த 2 வழிமுறைகளையும் பின்பற்றிய பிறகு, உங்கள் கேஸ் அடுப்பு மீண்டும் சீராகவும், நல்ல தீயுடனும் எரியும். இந்த பராமரிப்பை வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை செய்வது உங்கள் கேஸ் அடுப்பை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும். இதற்கு கடைகளில் சென்று பழுது பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே வீட்டிலேயே இதை சரிசெய்யலாம்.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: