நாட்டில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வரும் அம்பானி வீட்டில் தொடர்ந்து திருமண விழாக்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் கோவாவில் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
ஆகாஷும், ஸ்லோகாவும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். நாளடைவில் நட்பு காதலாக மாற்றி இரு வீட்டாரின் சம்மத்துடன் நிச்சயார்த்தம் நடந்து முடிந்தது. வரும் டிசம்பர் மாதம் திருமணம், நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து வந்தார். ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல் மிகப்பெரிய தொழிலதிபர். நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார்.
இந்நிலையில் இருவரின் காதல் விவகாரமும் வீட்டிற்கு தெரிந்து அவர்கள், பச்சை கொடி காட்டியுள்ளனர். இதனையடுத்து,
நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் அண்மைக் காலமாக காதலித்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல் மிகப்பெரிய தொழிலதிபர். நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார். நேற்ற் (7.5.18) மாலை இஷா மற்றும் ஆனந்தின் நிச்சயதார்த்த விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரையும் முகேஷ் அம்பானிக்கு பார்ட்டிக்கு அழைத்திருந்தார். வரும் டிசம்பர் மாதம் திருமண, நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.