Advertisment

பிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா?

ஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே 3 லட்சத்திற்கும் மேல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அம்பானி வீட்டு திருமணம்

அம்பானி வீட்டு திருமணம்

கடந்த 2 நாடகளாகவே இணையத்தை புரட்டி போட்டிருக்கும் தேடல் எதுவென்றால், அது அம்பானி மகளின் பிரம்மாண்ட திருமணம் தான். 5 நாட்கள் நடைபெறு இந்த திருமணத்தை பற்றி பேசாத நெட்டிச்ன்களே இல்லை. பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என மூச்சுக்கு 300 முறை பலரும் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அம்பானி மகளின் திருமணத்தில் ஆடையில் தொடங்கி, அழைப்பிதழ், சாப்பாடு என அனைத்திலும் பிரம்மாண்டத்தை மிஞ்சிய காட்சிகள் தான்.

Advertisment

அம்பானி வீட்டு திருமணம்:

ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தானில் ஏரிகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடமான உதய்ப்பூர் நகரில் இஷா அம்பானியின் திருமணம் கோலாகலமாக நடைபெறுவதையொட்டி, உதய்ப்பூர் நகரமே ஜொலிக்கத் தொடங்கியுள்ளது.

திருமணம் தானே என அசால்ட்டாக நினைப்பவர்களுக்கு மற்றொரு செய்தி. சமீபத்தில் நடந்த இஷா- ஆன்ந்த்  நிச்சயார்த்தம்  இத்தாலியில் ராஜா, ராணி செட்டப்பில் 3 நாட்கள் நடத்தப்பட்டன.  50க்கும் மேலான வகை சாப்பாடு, நிச்சயதார்த்ததில் கலந்துக் கொண்டவர்களுக்கு தங்கத்தில் பரிசு என  ஊரையே மூக்கின் மீது விரல் வைக்க வைத்தது இந்த நிச்சயதார்த்தம்.

அதன் பின்பு திருமண வேலை.  அழைப்பிதழில்  தொடங்கிய பிரம்மாண்டம்  இப்போது வரை ஓயவில்லை.   தங்கம், மாணிக்கம், வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே 3 லட்சத்திற்கும் மேல். ”அடங்கப்பா” என்றால் அதை பார்த்த அனைவரும்.

திருமணப் அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காக குடும்பத்தினருடன் அம்பானி கேதார்நாத் கோயிலுக்கும் சென்றார். அக்டோபர் 29ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்ற அம்பானி சுமார் 20 நிமிடங்கள் அங்கு பூஜைகள் செய்துவிட்டு, ஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்திருந்தார்.

ஒருவழியாக  திருமண நாள் நெருங்கிவிட்டது.  வரும் 12-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமான முறையில் இரு வீட்டு விருந்தினர்கள் பங்கேற்புடன் இஷா - ஆனந்த் திருமணமும் நடைபெற உள்ளது.

அதனைத்தொடர்து  உதய்பூர் நகரில் பிரம்மாண்ட வகையில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெறுகின்றன.இதற்காக உதய்பூர் நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களையும் முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார். உறவினர்களும், நண்பர்களும் உதய்பூர் நகர் செல்வதற்காக சுமார் 50 தனியார் விமானங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று மதியம் முதலே சிறப்பு விருந்தினர்கள் உதய்பூருக்கு வருகை தர தொடங்கி விட்டனர். இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து மட்டுமில்லாது, உலகமெங்கிலுமிருந்து, அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் வருகை தரவுள்ளனர். இவர்களை சிறப்பாக வரவேற்று கவனிப்பதற்காக தனியாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் இந்த திருமண வைபவத்தில் பங்கேற்க உள்ளனர்.

தோனி மனைவி சாக்ஷி, மகள் ஷிவாவுடன் நேற்று மாலை உதய்பூர் வந்தடைந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலை நிகழ்வுகளை நடத்துகின்றனர். இதனால் உதய்பூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

திருமணத்திற்கு பிறகு, இஷா தனது கணவர் ஆனந்த்துடன், மும்பை ஓர்லி பகுதியிலுள்ள ரூ. 450 கோடி மதிப்புள்ள பங்களாவில் குடியேற உள்ளார். இது ஆனந்த் குடும்பத்தால், இந்த தம்பதிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தொடங்கி இஷா அம்பானி திருமணத்தின் பீரிவெட்டிங் கொண்டாட்டங்கள் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உதய்பூரே விழாக்கோலம்  கொண்டுள்ளது.

 

Akash Ambani Mukesh Ambani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment