/indian-express-tamil/media/media_files/2025/06/28/natural-hair-dye-2025-06-28-19-25-09.jpg)
டை அடிச்ச மாதிரியே தெரியாது... இந்த 3 பொருட்கள் போதும்; டாக்டர் நித்யா
இன்றைய காலத்தில், இளம் வயதினரிடையே கூட நரை முடி பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. நரை முடியை மீண்டும் கருமையாக்க முடியுமா? பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை ஹேர் டை இருக்கிறதா? என்ற பல கேள்விகள் நம்மில் பலருக்கு எழலாம். இயற்கை முறையில் நரை முடியை மறைப்பதற்கான வழிகள் மற்றும் அதைத் தடுப்பதற்கான பராமரிப்பு குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
கடைகளில் கிடைக்கும் ரசாயன ஹேர் டை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தி, அரிப்பு, வீக்கம், தோல்உரிதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இந்த பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கையாகவே ஹேர் டை தயாரிக்க சில எளிய வழிகள் உள்ளன.
தேவையான பொருட்கள்:
மருதாணிப் பொடி (ஹென்னா) - சம அளவு
அவுரி இலை பொடி (Indigo powder) - சம அளவு
திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவை) - சம அளவு
டீ டிகாஷன் (அடர்த்தியாக காய்ச்சியது)
எலுமிச்சை சாறு - சிறிதளவு
கிராம்புப் பொடி - அரை ஸ்பூன்
செய்முறை:
மருதாணி, அவுரி இலை பொடி, திரிபலா சூரணம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இந்த பொடிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரவு முழுவதும் அடர்த்தியான டீ டிகாஷனில் நன்கு கலந்து ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறவைத்த கலவையுடன் சிறிதளவு எலுமிச்சைசாறு மற்றும் அரை ஸ்பூன் கிராம்புப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். தலைமுடியை நன்றாக அலசி சுத்தம் செய்த பிறகு, இந்தக் கலவையை தலைமுடியில் ஒரே மாதிரியாகத் தடவவும். 2 முதல் 3 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தலைமுடியை நன்கு அலசவும். ஒரு முறை பயன்படுத்தியவுடன், 50% முதல் 60% வரை நரை முடி மறைந்திருப்பதை காணலாம். அடுத்த நாளும் இதே முறையைப் பின்பற்றி மீண்டும் ஹேர் டை அப்ளை செய்யவும். தொடர்ந்து பயன்படுத்தும் போது நரை முடி பிரச்சனை படிப்படியாகக் குறையும். இந்த முறை ஏற்கனவே இருக்கும் நரை முடியை மறைக்க உதவும். ஆனால், இது நிரந்தர தீர்வு அல்ல என்கிறார் டாக்டர் நித்யா.
நரை முடி மீண்டும் வராமல் தடுக்க சில இயற்கை வழிமுறைகளையும் பின்பற்றலாம். தேங்காய் சிரட்டையை நன்கு சுட்டு கரியாக்கி வைத்துக்கொள்ளவும். வசம்பையும் சுட்டு கரியாக்கி வைத்துக்கொள்ளவும். இந்த 2 பொடிகளையும் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையில் நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடியில் தடவி, இரண்டு மணி நேரம் ஊறவைத்து குளிக்கவும். இது நரை முடி வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்கிறார் டாக்டர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.