தோல் அரிப்புகள், தடிப்புகள் மற்றும் பூச்சிக் கடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் பெரும் தொந்தரவாக அமைகின்றன. பித்த மிகுதியினால் ஏற்படும் தோல் அரிப்புகள், குடல் கழிவுகள் அதிகரிப்பதால் வரும் தடிப்புகள், சாட்டை சாட்டையாக தடித்தல், தேள், பூரான், பூச்சி போன்ற கடியினால் உண்டாகும் தோல் பிரச்சனைகள் எனப் பலவிதமான சருமப் பிரச்சனைகளுக்கு எளிமையான, இயற்கையான ஒரு தீர்வு இங்கே பரிந்துரைக்கிறார் டாக்டர் செங்கோட்டையன்.
Advertisment
இந்த அற்புத மருந்தை தயாரிக்க நமக்குத் தேவை வெறும் மூன்று பொருட்கள் மட்டுமே:
ஒரு கைப்பிடி குப்பைமேனி இலை ஒரு டீஸ்பூன் கல் உப்பு ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சள்
Advertisment
Advertisements
தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை
முதலில் குப்பைமேனி இலை, கல் உப்பு, மற்றும் அரைத்த மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக நன்கு இடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், 20 முதல் 30 மில்லி நீர் மட்டும் சேர்த்து, நன்கு மைய அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும்.
இந்த விழுதைத்தான் அரிப்பு மற்றும் தடிப்புகள் உள்ள இடங்களில் வெளிப் பூச்சாகப் பயன்படுத்த வேண்டும். இது அரிப்பின் தீவிரத்தைக் குறைப்பதோடு, சருமத்தில் ஏற்படும் கீறல்கள், வெடிப்புகள், வறட்சி போன்ற பிரச்சனைகளையும் நீக்கி, சருமத்தை மென்மையாக்கும். குப்பைமேனி இலைச் சாறு சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளித்து, நல்ல மாற்றங்களை உணர உதவும்.
உள் மருந்தாகவும் பயன்படுத்தலாம்
இந்த கலவையை வெளிப் பூச்சாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள் மருந்தாகவும் உட்கொள்ளலாம். ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு இந்த விழுதை எடுத்து, வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 முதல் 14 நாட்கள் சாப்பிட்டு வரும்போது, அரிப்பின் தீவிரம் கணிசமாகக் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வரும்.