இது உங்கள் பிறந்த நாள், நீங்கள் என்ன விரும்பினாலும் செய்யலாம்

மனித வரலாற்றில், மனிதர்கள் தங்கள் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. உண்மையில் பலருக்கு அவர்களின் பிறந்த நாட்களே அவர்களுக்கு தெரிவதில்லை.

உண்மைதான் எல்லா பிறந்தநாளும் உங்களுக்கு ஒன்றுபோல் இருக்காது. ஒரு சில பிறந்த நாட்களை உங்களை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும், ஒரு இனிமையான விருந்து கொண்டாட்டமோ அல்லது அன்பானவர்களுடன் ஒரு பயணமோ என்று உங்களை மகிழ்விக்கும். மற்ற ஆண்டுகளில் வயது கூடுகிறது என்ற அழுத்தத்தில், அந்நாளில் பெரிதாக கொண்டாட்டம் இருக்காது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

Anna Goldfarb

மனித வரலாற்றில், மனிதர்கள் தங்கள் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. உண்மையில் பலருக்கு அவர்களின் பிறந்த நாட்களே அவர்களுக்கு தெரிவதில்லை.

வரலாற்று ரீதியாக பார்த்தோமெனில், பேரரசர்களும், ராஜாக்களும், துறவிகளும் சமுதாயத்தில் பெரிய நிலையில் இருந்தவர்களுமே பிறந்த நாள் கொண்டாடியதாக, மினிசோட்டா பல்கலைக்கழக குடும்ப சமூக அறிவியல் துறை பேராசிரியர் வில்லியம் ஜே.டார்ட்டி கூறுகிறார். 1830ம் ஆண்டில் செல்வந்தர்களாக இருந்த ப்ராஸ்டான்ட் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாட துவங்கினர். பின்னர் அப்பழக்கம் அனைவருக்கும் பரவியது. குடும்பத்தை கொண்டாடுவோம், இனம், நுகர்வு கலாச்சாரம் மற்றும் குடும்ப சடங்குகள் என்ற எலிசபெத் ஹெச் பிலீக் அவர்களின் புத்தகத்தில், 1950ம் ஆண்டுகளில், கொஞ்சம் கேக், கொஞ்சம் ஐஸ்கிரீம்களுடன் கொண்டாடப்படும் உங்கள் குழந்தையின் பிறந்தநாள் மனதுக்கு நெருக்கமான நிகழ்வாக, இருந்தது. அது மிகவும் நல்லதாகவும் இருந்தது. அது பரிசுகளை வலியுறுத்தவும் இல்லை என்று டார்ட்டி கூறுகிறார்.

ரோலர் ஸ்கேட்டிங் ரிங், பந்து விளையாடுமிடம் உள்ளிட்ட குடும்ப பொழுதுபோக்கு மையங்கள் பெருக துவங்கிய 1980களில், பிறந்தநாள் கொண்டாட்டங்களை வண்ணமயமாக கொண்டாடுவது வளர்ச்சியடையத்துவங்கியது. அந்த இடங்களில் பிறந்த நாளை கொண்டாடுவது ஊக்குவிக்கப்பட்டது என்று பிலீக் எழுதியுள்ளார். குடும்பத்தினருடன், பள்ளியில், நண்பர்களுடன், நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினருடன் என்று திடீரென, குழந்தைகளுக்கு, பல்வேறு விருந்தினர்களுடன் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. ஆண்டில் ஒரு நாள், பிறந்த நாள் கொண்டாடும் நபர் மதிக்கப்படுவார். அனைவரும் அவர்களை வாழ்த்தும்போது, அவர்கள் தங்கள் வாழ்வின் சிறந்த நாளில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று டார்ட்டி கூறுகிறார். அவர் எவ்வித அழுத்தமுமின்றி தன் பிறந்தநாளை மினிசோட்டாவில் உள்ள செயின்ட் பாலில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெற்றோர் சூழ்ந்த ஒரு அழகான குழுவினருடன், மன அழுத்தத்தை போக்கும் வகையிலானதும், பொருளாதார சுமையுடன் தொடர்புடைய குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் எவ்வித துன்பமுமின்றி, உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினார். நம்மைப்போன்ற கலாச்சாரத்தில் இது பெரிய விஷயம்தான்.

உண்மைதான் எல்லா பிறந்தநாளும் உங்களுக்கு ஒன்றுபோல் இருக்காது. ஒரு சில பிறந்த நாட்களை உங்களை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும், ஒரு இனிமையான விருந்து கொண்டாட்டமோ அல்லது அன்பானவர்களுடன் ஒரு பயணமோ என்று உங்களை மகிழ்விக்கும். மற்ற ஆண்டுகளில் வயது கூடுகிறது என்ற அழுத்தத்தில், அந்நாளில் பெரிதாக கொண்டாட்டம் இருக்காது. உங்களை பிறந்தநாளை மேலும் சிறப்பாக கொண்டாட இதோ மேலும் சில மாற்றுவழிகள்.

விருந்தினர்களை எண்ணுங்கள், நிகழ்வுகளை அல்ல

பலரும் தங்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி திட்டமிடும்போது. மாற்றி யோசிக்கிறார்கள் என்று பிரியா பார்க்கர் நினைக்கிறார். விருந்தினர் கூடுகை எனும் கலை, எப்படி சந்திப்பது, ஏன் அது முக்கியம் என்ற புத்தகத்தை எழுதியவர். அவர் மேலும் அந்த நிகழ்வு குறித்து உங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டாம்.(ஒரு நல்ல உணவு விடுதியில் இரவு விருந்து அல்லது அருகில் உள்ள பாரில் ஒரு சந்திப்பு) மாறாக உங்கள் வாழ்வில் உள்ள ஒரு தேவையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதை யார் முழுமையாக்க உதவுவார்கள் என்பதையும் உணரவேண்டும்.

உங்களின் உண்மையான தேவைக்காக ஒரு குறிப்பிட்ட நபரை நீங்கள் அழைத்திருந்தீர்கள் என்றால், அது தைரியமான செயல், ஏனெனில், அது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒன்று உங்களுக்கு உதவி தேவை என்றும், இரண்டாவது அதை அவர்களால் செய்ய முடியும் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் பிறந்த நாளில் நீங்கள் சாகசத்திற்கு ஏங்கினீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் உள்ள பெரும் துணிச்சல்காரரை அழைத்து, ஸ்கைடிடவிங்கில் உங்களுடன் சேர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுங்கள். உங்கள் பிறந்த நாள் திட்டங்கள் உங்களுக்கு மட்டும் அர்த்தமுள்ளதாக இருக்கக்கூடாது. உங்கள் விருந்தினரை கவுரவித்ததாக இருக்க வேண்டும். உண்மையில் அவர்கள்தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாட உதவியவர்கள். இதை மற்றவர்களும் கடைபிடிப்பார்கள். வித்யாசமான முயற்சிகள் எப்போதும் மற்றவர்களையும், அதை செய்ய தூண்டும்.

எது உங்களுக்கு மகிழ்ச்சி?

எர்னஸ்ட் ஓவன்ஸ், 28 வயது நிறைந்த பிலடெல்பியா பத்திரிக்கை எழுத்தாளர், தனது பிறந்த நாளை இந்தாண்டு எப்படி கொண்டாடுவது என்பது குறித்த திட்டமிடலில், எது தனக்கு உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டார். அவரைப்பொருத்தவரை, தன் நண்பர்களை ஒரு நல்ல உணவு விடுதிக்கு அழைத்துச்செல்வது, உள்ளூரில் ஒரு நல்ல உணவை நண்பர்களுடன் உண்பது, அவரது இணையருடன் டேட்டிங் செல்வது என்பதாகும். பிலடெல்பியாவில் வாழும் ஓவன்ஸ் தனது பிறந்த நாள் வார இறுதி முழுவதும் நண்பர்களுடன் கொண்டாட்டத்தை

ஒருங்கிணைத்தார். அவர்களுக்கு வேலை குறித்து பேசக்கூடாது என்று அறிவுறுத்தி, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தார். உண்மையில் எனக்கு இது மகிழ்ச்சியளிக்கிறது. எனது வாழ்வில் எத்தனையோ பேரை தெரியும், குறிப்பாக கருப்பராக இருப்பதால், அவர்கள் இந்த வயதில் இதுபோல் செய்திருக்க முடியாது என்று ஓவன்ஸ் கூறுகிறார். இளம்வயதில் இறந்த எத்தனையோ பேரை பார்த்து, அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றும் அவர் கூறுகிறார்.

யாருக்கேனும் நல்லதை செய்யுங்கள்

பிறந்த நாள் என்றாலே கொண்டாட்டங்கள், குடிப்பது மற்றும் வயதாவது என்பதைவிட இந்த உலகை மேலும் சிறந்ததாக மாற்ற என்ன செய்லாம் என்ற கேள்வியையும் பிறந்த நாள் திட்டங்கள் கேட்கின்றன. பிறந்த நாள் திட்டங்கள், பிறந்தநாளன்று, தங்கள் சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மை செய்வதை ஊக்குவிப்பதாக இருக்கவேண்டும் என்பது 9 ஆண்டுகளுக்கு முன் ராபின் புமாரால் நிறுவப்பட்டது. தற்போது 47 வயதாகும் அவர், தனது 38வது பிறந்தநாளில், 38 அன்பான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் செலுத்தினார். அவை ஓட்டப்பயிற்சி செய்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுப்பது போன்ற நற்செயல்களாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் நற்செயல்கள் செய்யவேண்டும் என்று அவர் விரும்பினார்.

பிறந்த நாளில், பரிசு பெறுவது, மெழுகுவர்த்தி ஊதுவது, கேக் வெட்டுவதுடன், யாருக்கேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்ளை சிறந்தது என நம்பினார். ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும், 19 மில்லியன் பேர் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். அவர்கள், ஒருவருக்கேனும் ஏதாவது நல்லது செய்தால், உலகம் முழுவதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று புமார் கூறுகிறார்.

உங்களின் சிறந்த நாளில் யாருக்கேனும் நன்மை செய்தால், அது உங்களுக்கு பலனளிக்கும். அது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்காக அல்ல. அந்த நன்மைகள் ஏற்படுத்தப்போகும் தாக்கத்திற்காக மற்றும் அது ஏற்படுத்திச்செல்லும் அலை மற்றவர்களையும் நன்மைகளை செய்யதூண்டும்.

ஏதேனும் நன்மை செய்துவிட்டு, உங்கள் பிறந்த நாளின் இரவில் நீங்கள் தூங்கச்சென்றால், நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக உணர்வீர்கள், நீங்கள் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லையென்றாலும் அது மாற்றத்தை கொடுத்துள்ளது என்று அவர் கூறுகிறார். வயதாக ஆக, நாம் என்ன செய்கொண்டிருக்கிறோம் என்பதும், இங்கு என்ன தேவை என்பதையும் உணரவேண்டும் என்பது அவசியம்.

24 வயதான அரியானா மெக்லைமோர், நியூயார்க் பல்கலைக்கழக மாணவி, தனது வகுப்பறைகளை புறக்கணித்துவிட்டு, புதிய இடங்களுக்கு சுற்றுவார். அவரது பிறந்தநாள் செப்டம்பர் மாத மத்தியில் வருகிறது. இந்தாண்டு தனது பிறந்தநாளை ப்ராக்ஸில் உள்ள சூப் கிச்சனில் பசியுடன் இருப்பவர்களுக்கு இலவச உணவளித்து கொண்டாட விரும்பினார். தனது பிறந்த நாட்களுக்கு சில நாட்கள் முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடன் சேர்ந்துகொள்பவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடன் வருவதாக சில நண்பர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர். எனக்கு அவ்வாறு பிறந்தநாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்படியே சென்றுகொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

உங்கள் பிறந்தநாளை ஆராய்ந்து திட்டமிடுங்கள்

வடக்கு காரோலினா சார்லெட்டில் உள்ள நேத்ரா கோல்வர் தவாப் என்ற சமூக ஆர்வலர், பிறந்த நாட்கள் நெருக்கும்போது கடினமான சூழ்நிலையை எதிர்கொள்பவர்களுக்கு பிறந்த நாளுக்கு ஏதேனும் திட்டத்தை தீட்டவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

உங்கள் பிறந்த நாளுக்கு மற்றவர்கள் திட்டமிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள்.

மியூசியம் ஹேக் என்ற மெட்ரோபாலிட்டன் ஆர்ட் மியூசியம் போன்ற மியூசியங்களுக்கு மட்டும் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் நிறுவனர், 38 வயதான நிக் கிரே, லிங்கன் மையத்தில் தனது பிறந்தநாள் விருத்தினர் கூட்டத்தை நடத்தினார். அனைவரை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, அவர்களிடையே புதிய இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். எவ்வாறு புதிய நண்பர்களை உருவாக்குகிறார்கள். அது எவ்வளவு கடினம் என்று அவர் கூறுகிறார். இதன் கரு, பிறந்தநாள் மாநாடு என்பதாகும். அவர் அங்கு வந்திருந்த, 70 நண்பர்களுக்கு பெயர் சீட்டை வழங்கினார். அதில் 20 பேர் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் பேசினார்கள். நகைக்சுவை குழுவினர், நடனம், பேண்ட் இசை போன்றவற்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் தனக்கு உதவியாக 10 பேரை வைத்துக்கொண்டார். பிறந்த நாள் கொண்டாட்டங்களை சிக்கலாக்கிக்கொள்ளாதீர்கள் என்று கிரே கூறுகிறார். மேலும் நீங்கள் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தால், உணவை வெளியில் இருந்து வரவழைத்தாலும் சரி அல்லது நீங்களே சமைத்தாலும் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என்று அவர் கூறுகிறார். பெரும்பாலானோர் தங்கள் பிறந்த நாட்களை திட்டமிடாததற்கு காரணம், அந்த கொண்டாட்டத்தை அவர்கள் சுயநலமாக கருதுவதால்தான் என்கிறார் கிரே. பரவாயில்லை. நான் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்கிறேன். உங்கள் நண்பர்கள் அனைரையும் ஒன்றாக அழைத்து விருந்து கொடுப்பது உங்கள் பிறந்த நாள் பரிசாக, இருக்கக்கூடாதா என்று கேட்கிறேன் என்கிறார்.

தமிழில் : R. பிரியதர்சினி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close