தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த ஐக்கி பெர்ரி ஒரு ராப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்.
ஐக்கி’ ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார். பின்னர் KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார், இது 2008 இல் இசை இயக்குனர் A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும்
ஜனவரி 2020-இல் ஐக்கி தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.
அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.
ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி’ வெளிச்சத்துக்கு வந்தார். ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை ஐக்கி யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் போகவில்லை.
சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும், தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். மற்ற போட்டியாளர்கள் யாரிடமும் அவ்வளவாக தொடர்பில் இருக்கமாட்டார்கள். ஆனால் ஐக்கி அதிலும் வித்தியாசமாகத் தான் இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு ஐக்கி பெர்ரி, தன்னுடன் விளையாடிய சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று நட்பு பாராட்டுகிறார். அதே நேரம் தனது ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஐக்கி இப்போது’ அபிநய், நிரூப், சுருதி ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். என் நண்பனாக இருக்க நீ பைத்தியமாக இருக்க வேண்டியதில்லை. நான் உனக்கு பயிற்சி தருகிறேன் ., ஹா ஹா ஹா., என்று’ நிரூப், அபிநய் உடன் குட்டி பொம்மை காரில் விளையாடும் வீடியோவையும் ஐக்கி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அதைப் பார்த்த பலரும் கூல், கியூட், லவ்லி என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“