Advertisment

பிக்பாஸ் வீட்டுல அப்படி இருந்த ஐக்கி பெர்ரியா இது? இப்போ இப்படி மாறிட்டாங்களே!

பிங் நிற கிராப் டாப், ஒரு மினி ஜீன்ஸ் ஷார்ட் அணிந்து, ஸ்னீக்கர்ஸ், கூலிங் கிளாஸ் என பார்க்க படு மாஸாக இருக்கும் ஐக்கி பெர்ரி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Iykki-berry

Iykki Berry New Glamour look viral on social media

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, ஜனவரி 2020-இல், தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.

Advertisment

அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி’ வெளிச்சத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என நினைத்தனர். ஆனால், அவருக்கு தஞ்சாவூர் என்பது தெரியவந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் திகைத்து விட்டனர். அப்படி ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு ஐக்கி பெர்ரி, ’எலா’ என்ற ராப் சாங் வெளியிட்டார்.

இப்போது ஐக்கி பெர்ரியின், ராணி எனும் புதிய பெப்பி நம்பர் சாங், இணையத்தில் செம வைரலாகி வருகிறது. தொடர்ந்து ஐக்கி, தனது ஆல்பம் பாடல் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் ஐக்கி பெர்ரிக்கு, ஸ்டார் சாதித்தவர்கள் விருது 2022 விழாவில்’ சிறந்த பெண் சுயாதீன கலைஞருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் பெண்கள் ஐகானிக் விருது 2022 விழாவில், ஐக்கி பெர்ரிக்கு, குயின் ஆஃப் இன்டிபென்டன்ட் மியூசிக்- விருது வழங்கப்பட்டது. அந்த வீடியோவையும் ஐக்கி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஐக்கி பெர்ரி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த போட்டோவை பாத்த பலரும், வாயடைத்து போய் உள்ளனர். அதில் ஐக்கி ”விதிகளை மறந்துவிடுங்கள், உங்களுக்கு பிடிக்கிறதா? உடுத்திக் கொள்ளுங்கள்” என எழுதி பிங் நிற கிராப் டாப், ஒரு மினி ஜீன்ஸ் ஷார்ட் அணிந்து, ஸ்னீக்கர்ஸ், கூலிங் கிளாஸ் என பார்க்க படு மாஸாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த பலரும் அழகி, கார்ஜியஸ், பார்பி, டால் என கமென்டில்  பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment