Advertisment

புதிய ரெசிபி: சுவையான கம கம பலாப்பழ பணியாரம்

பலாப்பழ பணியாரம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
jackfruit 5 - unspalsh (1)

சுவையான மண மணக்கும் பலாப்பழ பணியாரம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான அளவு 

பலாச் சுளை- 15 

தேங்காய் துருவல்- 1 கப்

முந்திரி, ஏலக்காய்- தேவையான அளவு 

வெல்லம்- தேவையான அளவு  

பச்சரிசி மாவு- 2 கப்

நெய்-தேவையான அளவு 

எண்ணெய்-தேவையான அளவு 

செய்முறை

முதலில் பலாச் சுளைகளை  கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அடுத்து தேங்காய் துருவல், முந்திரியை அரைக்கவும். ஏலக்காயையும் அரைக்கவும். 

அடுப்பில் கடாய் வைத்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும். இப்போது அதில் பச்சரிசி மாவு, பலாப்பழ கூழ், தேங்காய், முந்திரி விழுது, ஏலக்காய் தூள் நெய் கலந்து நன்கு கெட்டியாக கிளறவும். 

அடுத்ததாக அடுப்பில் பணியார கல் வைத்து இந்த மாவு கலவையை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி  இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். சூடாக பரிமாறவும். அவ்வளவு தான் பலாப்பழ பணியாரம் ரெடி. 

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment