பலா பழத்தை வைச்சு செய்யப்படும் இந்த மங்களூரியன் ஸ்வீட் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
10 பலாப்பழம்
அரை கப் வெல்லம்
கால் கப் துருவிய தேங்காய்
2 ஏலக்காய்
அரை கப் பச்சரிசி
கொஞ்சம் உப்பு
வாழை இலை
செய்முறை : பலா பழத்தை சிறிதாக நறுக்க வேண்டும். பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸியில் பலாப் பழம், வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய், பச்சரிசியை சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு இலையை சதுரமாக வெட்டி, அதில் அரைத்த விழுதுதை சதுரமாக பரப்ப வேண்டும். இலையை மடித்து, இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்.