பலாப் பழம் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? இந்தியாவில் இதன் காய், சைவ உணவு உண்பவர்களால் பெரும்பாலும் இறைச்சிக்கு பதிலாக விரும்பி உண்ணப்படுகிறது.
டாக்டர் உஷாகிரண் சிசோடியாவிடம் (Registered Dietician and Clinical Nutritionist, Nanavati Max Super Speciality Hospital) இந்தப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றிப் பேசினோம்.
ஒவ்வொரு 100 கிராம் பலாப்பழத்திலும் உள்ள ஊட்டச்சத்து விவரம்
· Calories: 95
· Dietary Fiber: 1.5 g
· Sugars: 19.08 g
· Protein: 1.72 g
· Vitamin C: 13.7 mg
· Vitamin A: 110 IU
· Potassium: 303 mg
· Calcium: 24 mg
பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
டாக்டர் சிசோடியாவின் கூற்றுப்படி, அதன் உயர் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கலவையுடன், பலாப்பழம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது, ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் உகந்த ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
பலாப்பழம் சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கலவையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் விளக்கினர்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானது என்றாலும், அவர்கள் அதை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். குறிப்பாக பழுத்த பலாப்பழங்கள், அதிக இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் கொண்டிருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்.
பலாப்பழத்தை மிதமாக உட்கொள்வது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக பழுத்த பழம் சாப்பிடும்போது. அல்லது உங்கள் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது நீரிழிவு நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள், என்று டாக்டர் சிசோடியா கூறினார்.
மனதில் கொள்ள வேண்டியவை
பலாப்பழம் சுவையாக இருந்தாலும், எந்தப் பழத்தையும் போல, அதை அதிகமாக உட்கொள்வது செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பலாப்பழ சாறு சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், அரிப்பு ஏற்படலாம்.
மிக முக்கியமாக, சர்க்கரையின் அளவைக் கருத்தில் கொண்டு, நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
பலாப்பழம் அனைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் முற்றிலும் பாதுகாப்பானது என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் முன்பு கூறியது போல், பழுத்த நிலையில் உள்ள சர்க்கரையின் அளவைக் கருத்தில் கொண்டு, நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும், என்று டாக்டர் சிசோடியா விளக்கினார்.
Read in English: Nutrition alert: Here’s what a 100-gram serving of jackfruit contains
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.