பலாப்பழம் சாப்பிடுவோம். ஆனால் பலாக்காயை பொரும்பாலானோர் சாப்பிட மாட்டோம். குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் அதை வைத்தும் குழம்பு செய்யலாமாம். சிம்பிளான பலாக்காய் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பலாக்காய்- 250 கிராம்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 6-7 பற்கள்
செய்முறை
முதலில் பலாக்காய்களை (கொட்டை) தோலுரித்து, துண்டுகளாக நறுக்கி, கழுவிக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் குக்கர் வைத்து நறுக்கிய பலாக்காயை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு வேக விடவும். அடுத்து தண்ணீர் வடித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பிரியாணி இலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதங்கியதும், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, வேக வைத்துள்ள பலாக்காயை போட்டு 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான், சுவையான பலாக்காய் குழம்பு ரெடி. சுடு சோறு, சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“