பலாக்காயில் சுவையாக பொரியல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பலாக்காய் – 500 கிராம்
பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறிதளவு
கரம் மசாலாத் தூள் – 3 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு
கொத்த மல்லி இலை – சிறிதளவு
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பலாக்காயின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து, பலாக்காய் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும்.இஞ்சி, பூண்டு எடுத்து நறுக்கிக் கொள்ளவும். இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
அதன் பின் வேக வைத்த பலாக்காய் துண்டுகளைப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றைப் போட்டு கிளறவும். 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக விட்டு கொத்தமல்லி இலை, தேங்காய்த் துருவல், புதினா இலை போட்டு இறக்கினால் சுவையான பலாக்காய் பொரியல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“