Advertisment

காலையில் வெறும் வயிற்றில் நெய்யுடன் கொஞ்சம் வெல்லம்… மலச்சிக்கலுக்கு சொல்லுங்க குட் பை

மலச்சிக்கல் தற்பொது அனைவரையும் பாதிக்கும் ஒரு நோயாக உள்ளது. இந்நிலையில் இதற்கு மாத்திரை சாப்பிடும் நிலை ஏற்பட்டால் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

author-image
WebDesk
New Update
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் தற்பொது அனைவரையும் பாதிக்கும் ஒரு நோயாக உள்ளது. இந்நிலையில் இதற்கு மாத்திரை சாப்பிடும் நிலை ஏற்பட்டால் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

Advertisment

இந்நிலையில் சில உணவுகள் மலச்சிக்கலை குறைக்க உதவும். இந்நிலையில் சாப்பிட்ட பிறகு நெய் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு அல்லது வாழைப்பழத்தை சாப்பிடலாம். எள்ளை சாப்பிடலாம். நெய்யில் வெல்லம் சேரும்போது, அது வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கும். குடலின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும். காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் சிறிய அளவில் வெல்லத்தை சாப்பிடலாம்.

சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் நெய்யுடன் வெல்லத்தை சேர்க்க வேண்டாம். எலுமிச்சையில் நார்சத்து உள்ளது,இது  வரட்சியடையாமல் நம்மை வைத்துக்கொள்ள உதவுகிறது. இதை நாம் சாப்பிட்ட பிறகு சாப்பிடும் ஸ்நாக்ஸாக எடுத்துகொள்ள வேண்டும்.

எள்ளில் உள்ள நார்சத்து வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கும். நாம் எள்ளை சாப்பிட்டால், நாம் வெளியேற்றும் மலக் கழிவுகள் எளிதாக வெளியேற்றப்படும்.  

திரிபலா நமது வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கும். ஜீரண மண்டலத்தை சுத்திகரிக்கும். ஒரு ஸ்பூன் முழுவதும் திரிபலா பொடியை சூடான நீரில் சேர்த்து குடிக்க வேண்டும்.

விளக்கெண்ணெய்

இதில் இயற்கையான பேட்டி ஆசிட் இருக்கிறது. இது நமது குடல்களின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. சூடான பாலில் விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். இதை காலை வேளையில் எடுத்துகொள்ள வேண்டும்.

பிளக்ஸ் விதைகள்

நமது கழிவுகளை இது மிரதுவாக்கும். இதனால் வயிற்றின் செயல்பாடு சீராகும். இந்த விதைகளை சூடான தண்ணீர் அல்லது தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.  

கற்றாழை இதில் நமது ஜீரண மண்டலம் சீராக செயல்பட உதவும். கற்றாழையில் உள்ள ஜெல்லை, தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment