சமீப காலமாக ஆர்கானிக் உணவு, இயற்கை உணவு முறை மக்களிடையே வளர்ந்து வருகிறது. அதில் ஒன்றாக, வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து நாட்டு சர்க்கரை, வெல்லத்தை பயன்படுத்துவது என்ற போக்கு அதிகரித்து வருகிறது. வெள்ளை சர்க்கரை உடலுக்கு நல்லதல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால், வெல்லத்தின் பயன்களைத் தெரிந்தவர்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து நமது நுரையீரலை சுத்தப்படுத்துவது வரை, வெல்லம் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. வெல்லத்தின் பயன்பாடு குளிர்காலத்தில் அதிகரிக்கிறது. ஏனென்றால், வெல்லம் நம் உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்க உதவுகிறது. இன்னும் முக்கியமானது, வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்கிறது.
சில விஷயங்களைச் செய்வதன் மூலம் வெல்லத்தின் நன்மையை இரட்டிப்பாக்க முடியும். எப்படி என்றால், வெல்லத்தை வெதுவெதுப்பான நீரில் கலப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரிய பலனைத் தரும். எப்படி என்பதை கீழே காணுங்கள்.
வெல்லத்தின் நன்மைகள்:
வெல்லத்தில் இரும்புச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி நிறைய உள்ளது. வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைப்பதால் அது இன்னும் நன்றாக இருக்கும். சூடான நீரில் வெல்லத்தை கலப்பதால் 5 ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. அதிலும், இந்த கோவிட் தொறு நோய் காலத்தில் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.
குளிர்காலம் அதிகாரப்பூர்வ காய்ச்சல் வருகிற காலம் என்பதால், வெல்லம் வைத்திருப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். வெல்லம் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. வெல்லத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பருவகால காய்ச்சலின் அறிகுறிகளைப் போக்க உதவும். வெல்லத்தில் உள்ள பினோலிக் கலவைகள் ஆக்ஸிஜனேற்ற குறைவை எதிர்த்துப் போராடும். உடலை நிதானப்படுத்துவதோடு நோய்த்தொற்றுக்கு எதிரான சக்தியை அதிகரிக்கும்.
காலையில் சூடான வெல்லத் தண்ணீரைக் குடிப்பது உங்கள் வயிற்று புண்களை ஆற்றவும் நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். இதன் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளை நீக்க உதவுகிறது.
சூடான வெல்லத் தண்ணீர் சிறந்த குளிர்கால பானங்களில் ஒன்றாகும். இது உடல் வெப்பநிலையை உறுதிப்படுத்த உதவுகிறது. இரத்த நாளங்களை தளர்வாக்க உதவுகிறது. இது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
வெல்லத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதோடு பருவகால காய்ச்சலிலிருந்து மீள உதவும் என்று கூறப்படுகிறது. அதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும், மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அவர்களின் ஆற்றல் அளவை அதிகரிக்க முடியும், இதனால் விரைவாக குணமடைகின்றனர்.
உடலில் அதிக நீர் இருப்பது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை நிர்வகிக்க உதவுகிறது. இதனால், உடலில் இருக்கு அதிக நீரை குறைக்கிறது. இது எடை இழப்புக்கு மேலும் உதவுகிறது.
எலுமிச்சை வெல்ல தண்ணீர் தயாரிக்க உங்களுக்கு தேவையான பொருட்கள்:
வெல்லம் தூள், ஒரு கிளாஸ் சூடான நீர், விரும்பினால், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு அவ்வளவுதான்.
வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் தூள் கலந்து, எலுமிச்சை சாறு சேர்த்ததும் சுவையான வைட்டமின் சி அடங்கிய பானம் தயார். இப்போது அதை மெதுவாக உட்கொள்ளுங்கள்.
வெல்லம் சர்க்கரைக்கு மாற்றாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் வெல்லத்தை சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால், வெல்லத்தில் அதிக அளவு கிளைசெமிக் இருப்பதால் அது திடீரென சர்க்கரையை அதிகரிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.