கொரோனா நிதி உதவி: ஜன் தன் வங்கிக் கணக்கை ஆன்லைனில் தொடங்குவது எப்படி?

Jandhan Yojna Tamil News: இந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ500 வீதம் 3 மாதங்களுக்கு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

By: Published: March 28, 2020, 6:39:10 PM

Pradhan Mantri Jan Dhan Yojana Bank Account: இந்திய அரசால் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana-PMJDY) திட்டம் 2014 ஆம் ஆணடு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து தரப்பு மக்களையும் வங்கி அமைப்பில் இணைப்பதாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும்/ தனிநபருக்கும் குறைந்தது ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடிமகனும் அரசு வழங்கும் அனைத்து நிதி மானியங்களையும், வங்கி திட்டங்களையும் நேரடியாக அணுக முடியும். இதன் மூலம் ஒரு இடைத்தரகர் / ஒப்பந்தக்காரர் தங்களது சரியான நிலுவைத் தொகையை ஏமாற்றுவதற்கான வாய்ப்பை நீக்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் துவங்கப்படும் கணக்குகள் RuPay debit அட்டை மற்றும் overdraft அம்சத்துடன் வரும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள் (Basic Savings Bank Deposit). மேலும் உள்ளடக்கிய வாகன விபத்து காப்பீடையும் PMJDY வழங்குகிறது. PMJDY வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக நிரப்பலாம் மேலும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு திறக்க நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.


10 வயதுக்கு குறைவான சிறார்களும் இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு திறக்க தகுதியானவர். ரூபாய் 10,000/- வரை Overdraft வசதி ஒரு வீட்டுக்கு ஒரு கணக்கு அதிலும் வீட்டிலுள்ள பெண்களுக்கு கிடைக்கும். ஜன்தன் கணக்கை திறக்க நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை மேலும் இந்த திட்டம் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் RuPay debit அட்டைகளை வழங்குகிறது.

Jandhan Yojna Tamil News: பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா

பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கை எவ்வாறு திறப்பது

பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா கணக்கை திறப்பதற்கு தகுதிவாய்ந்த அடையாள ஆவணங்களாக அனுமதிக்கப்படுவது எவை?

ஓட்டுனர் உரிமம் (Driving licence), ஆதார் அட்டை (Aadhaar card), இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாளா அட்டை (Voter id issued by the Election Commission of India), கடவுச்சீட்டு (Passport), பான் அட்டை (PAN card), மாநில அரசு அதிகாரியால் கையொப்பமிடப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அடையாள அட்டை (NREGA issued job card signed by a state government officer), அல்லது மத்திய அரசு அடையாள அட்டை (any document notified by the Central Government).

PMJDY விண்ணப்பம்

பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா விண்ணப்ப படிவத்தை பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஏதாவது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள் விவரங்கள் (KYC details)

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அடையாள ஆவணம், முகவரிச் சான்று மற்றும் வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள் விண்ணப்பத்தையும் முழு விவரங்களோடு பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

எந்த வங்கியில் ஜன்தன் யோஜனா கணக்கு துவங்கப்போகிறீர்களோ அந்த வங்கி கிளைக்கு கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். ஆவணங்களை சரிப்பார்த்த பிறகு கணக்கு திறக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கொரோனா நிவாரணமாக மத்திய அரசு மாதம் ரூ500 வீதம் 3 மாதங்களுக்கு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Lifestyle News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Jandhan yojna tamil news pradhan mantri jan dhan yojana bank account open

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X