/indian-express-tamil/media/media_files/yHma9biH7jB1eBAXuGQJ.jpg)
Janhvi Kapoor
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்களில் ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா ஒன்றாகக் காணப்பட்ட நிலையில், இருவரும் டேட்டிங் செய்வதாக மீண்டும் வதந்திகள் பரவியது.
சமீபத்தில், ஜான்வி தனது முதல் ஹார்ட் பிரேக் பற்றியும், அதே பையன் அவளுடன் இணைந்ததால் அது தன்னை எப்படிப் பாதிக்கவில்லை என்றும் பேசினார்.
ஹாட்டர்ஃபிளையில் பேசிய ஜான்வி, ‘வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே நான் ஹார்ட் பிரேக் அனுபவித்திருக்கிறேன், ஆனால் அதே நபர் திரும்பி வந்து என் இதயத்தை ஒன்றாக இணைத்தார். எனவே, எல்லாம் நன்றாக இருந்தது.
இளமையாக இருந்தபோது மாதவிடாய்க்கு முன் வரும் மனநிலை மாற்றங்கள், எனது காதலனுடனான உறவை பாதித்தது. மாதவிடாய் ஏற்பட்ட ஓரிரு ஆண்டுகளில், ஒவ்வொரு மாதமும் நான் அவருடன் பிரேக் அப் செய்து விடுவேன்.
முதல் இரண்டு மூன்று மாதம் அவர் அதிர்ச்சியில் இருப்பார், அதன் பிறகு, எஸ் ஓகே என்பார். இரண்டு நாள் கழித்து அழுதுகொண்டே மன்னித்துவிடு என்று அவனிடம் திரும்பிச் செல்வேன். என் மூளை ஏன் இப்படி வேலை செய்கிறது என்று புரியவில்லை. இது மிகவும் தீவிரமானது, என்று ஜான்வி அந்த பேட்டியில் கூறினார்.
ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு புட் பாய்சன் காரணமாக ஜான்வி கபூருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கடந்த 18ம் தேதி அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான்வி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜான்வி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us