காதலனின் மொபலை செக் பண்ணலாமா? ஜான்வி கபூர் கருத்தும், உளவியலாளரின் எச்சரிக்கையும்!

நடிகை ஜான்வி கபூர், தான் காதலில் இருக்கும்போது தனது துணையின் மொபைலைச் சோதிப்பேன் என்று வெளிப்படையாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த செயல் குறித்து உளவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகை ஜான்வி கபூர், தான் காதலில் இருக்கும்போது தனது துணையின் மொபைலைச் சோதிப்பேன் என்று வெளிப்படையாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த செயல் குறித்து உளவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Janhvi Kapoor

காதலனின் மொபைலை சோதிக்கலாமா? - ஜான்வி கபூரின் பேச்சும், உளவியலாளரின் எச்சரிக்கையும்!

'மிஸ்டர் & மிஸஸ் மாஹி' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது நடிகை ஜான்வி கபூர், தான் காதலில் இருக்கும்போது எனது லவ்வர் போனை சோதிக்கும் பழக்கம் இருப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்தார். இந்த நேர்மையான உரையாடலில், "எனக்குத் தெரியும் இது எல்லை மீறல் (red flag) ஆனாலும் நான் அதைச் சோதிப்பேன்" என்று அவர் கூறினார். இதே உரிமையை காதலனுக்கும் வழங்கலாமா என்று கேட்டபோது "இல்லை, ஏன்? அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்று ஜாலியாகப் பதிலளித்தார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

ஜான்வி கபூரின் இந்தத் தகவல், ஒரு உறவின் அடிப்படையான நம்பிக்கையையும், நேர்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. பிரபலங்களிடம் நாம் ஆலோசனை பெறுவது வழக்கம் என்றாலும், இந்த விவகாரத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, தொழில்சார் உளவியலாளர் குர்லீன் பருவா அறிவுறுத்துகிறார்.

காதலனின் மொபைலை ஏன் சோதிக்கக் கூடாது?

இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்குப் பேட்டியளித்த குர்லீன் பருவா, "பொதுவாக, ஒரு உறவில் ஒருவருக்கொருவர் அனுமதி இருந்தாலும், இன்னொருவரின் மொபைலைச் சோதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் செயல் பல முக்கியமான காரணிகளை உள்ளடக்கியது," என்று விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, நம்பிக்கை என்பது ஆரோக்கியமான உறவின் அடிப்படை. காதலரின் மொபைலைச் சோதிப்பது, அந்த நம்பிக்கையையும், ஒருவருக்கொருவர் மீதுள்ள பாசத்தையும் குறைத்துவிடும். தனிப்பட்ட ரகசியம் என்பது மிகவும் அவசியம், அந்த எல்லையை மீறுவது உறவில் நீடித்த சேதத்தை ஏற்படுத்தும்.

சந்தேகத்தை வளர்க்கும் பழக்கம்

Advertisment
Advertisements

"ஒரு துணையின் மொபைலைச் சோதிப்பது, சந்தேகத்தையும், தேவையற்ற பயத்தையும் நீக்குவதற்குப் பதிலாக, ஒரு சுழற்சியை உருவாக்கும். இந்தச் செயல் பெரும்பாலும் தீவிரமடைந்து, தேவையற்ற அத்துமீறல், அதிக மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கும்," என்று பருவா குறிப்பிட்டார். இந்த பழக்கம் ROCD போன்ற மனநலப் பிரச்னைகளுக்கு வழிவகுத்து, மன ஆரோக்கியத்தையும், உறவையும் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

தீர்வு என்ன?

திறந்த மனதுடன் பேசுவது, தெளிவான எல்லைகளை வகுப்பது மிகவும் முக்கியம் என்று அவர் நம்புகிறார். "மொபைலை நோண்டுவதற்குப் பதிலாக, தங்கள் மனக்கவலைகள் குறித்து இருவரும் வெளிப்படையாகப் பேச வேண்டும். இது வலுவான மற்றும் நம்பிக்கையான உறவை வளர்க்க உதவும்" என்றும் அவர் கூறினார்.

தம்பதியர் தனியுரிமை & வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை எப்படி கையாளலாம்?

தனியுரிமை குறித்த எதிர்பார்ப்புகளைப் பற்றித் தெளிவாகப் பேசிக் கொள்ள வேண்டும். என்ன தகவலைப் பகிர வேண்டும், எதை ரகசியமாக வைக்கலாம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டு, இருவரும் புரிதலுடன் இருக்க வேண்டும். நேர்மையுடன் நடந்துகொள்வதன் மூலம் நம்பிக்கை வளர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் செயல்களில் நம்பிக்கை ஏற்படும்போது, அது உறவை வலுப்படுத்தும். தவறான புரிதல்களைத் தவிர்க்க எந்தவொரு கவலையையும் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

ஒருவருக்கொருவர் தனிப்பட்ட இடத்தையும், நேரத்தையும் மதித்து நடக்க வேண்டும். இது தனிப்பட்ட மனநலத்திற்கும், உறவின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். உங்கள் உணர்வுகள் மற்றும் கவலைகளைப் பற்றித் துணையிடம் பேசுங்கள். பாதுகாப்பற்ற உணர்வு இருந்தால், மொபைலைச் சோதிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அதைப் பற்றிப் பேச வேண்டும். உணர்வுகளில் வெளிப்படையாக இருப்பது, உணர்வின் மூல காரணத்தைப் புரிந்துகொண்டு அதைத் தீர்க்க உதவும். மொபைலில் அதிக நேரம் செலவழிக்கும் இந்தப் பழக்கம், தூக்கம், தனிப்பட்ட உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலத்தைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: