69-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா குஜராத்தில் உள்ள காந்திநகரில் நடைபெற்றது.
இதில் பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்துகொண்டாலும், ஜான்வி கர்பூரின் நடனம் மற்றும் அவர் அணிந்த லெஹங்கா அனைரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெள்ளி வட்டங்கள் கொண்ட மின்னும் துணியில் இந்த லெஹங்காவை செய்திருந்தார்கள்.
கீழே அணியும் பாவாடையில் பிங்க் நிறம் இருந்தது, மேலும் அதற்கு மேலாக பாதி நீளத்தில் உள்ள கிராப் பிளவுஸை அணிந்திருந்தார். பிளவுசின் கையில் பல நிறங்கள் கொண்ட கிளேஸ் வேலைபாடுகள் இருந்தது. மேலும் அதன் முடிவில் குங்ரூஸ் இருந்தது.
இந்நிலையில் இதைத்தொடர்ந்து அடுத்த பாடலுக்கு ஆடும்போது கீழே வெள்ளை நிறத்தால் ஆனா மினுங்கும் துணியில் பாவாடை அணிந்திருந்தார். இந்நிலையில் இந்த உடைகளை நடனம் ஆடும்போது பயன்படுத்தினார். ஒட்டுமொத்த விழாவிற்கு அவர் கருப்பில் நிறத்தில் ஒரு நீளமான கவுனை போட்டிருந்தார். மிகவும் கச்சிதமாக அவர் உடலுக்கு பொருந்தியிருந்தது. அதற்கு வைரத்தால் ஆன நெக்லேஸ் அணிந்திருந்தார். இந்த லிக்கில் அவர் அனைவரையும் கவர்ந்தர்.
இதற்கு முன்னாபக அவர் படத்தின் புரோமோஷனில் மார்க் போவர் என்ற ஆடை வடிவமைப்பாளர் செய்த சிவ்வர் நிறத்தில் உள்ள கவுனை அவர் அணிந்திருந்தார் இதிலும் அவர் மிகவும் அழகாக காட்சி அளித்தார். இந்த உடையின் விலை ரூ. 4.26 லட்சம்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“