Advertisment

ஆபாச தளங்களில் வெளியான போட்டோஸ்: இளம் வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜான்வி கபூர்

உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் மட்டுமே பொருத்தமான பிரைவேசி செட்டிங்ஸ் மூலம் உங்கள் சமூக தளங்களைப் பகிரவும்.

author-image
WebDesk
New Update
Janhvi Kapoor

Janhvi Kapoor

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பதின்வயதினர் ஆன்லைன் பாலியல் அபாயங்களுக்கு அதிகளவில் ஆளாகிறார்கள். ஜான்வி கபூர் போன்ற பிரபலங்கள் கூட தங்களின் புகைப்படங்களை பொருத்தமற்ற தளங்களில் கண்டறிவது பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர், இது அதிக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

Advertisment

கரண் ஜோஹருடன் சமீபத்தில் நடந்த உரையாடலில், ஜான்வி 12 அல்லது 13 வயதில் தனது தாய் ஸ்ரீதேவி மற்றும் தந்தை போனி கபூர் ஆகியோருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேரத்தை நினைவு கூர்ந்தார்.

பல புகைப்படங்கள் க்ளிக் செய்யப்பட்டு ஆன்லைனில் பரப்பப்பட்டன, ஆனால் "ஆபாச தளம் போல் தோன்றிய" தளத்தில், அவை பதிவேற்றப்பட்டதை அவள் கண்டுபிடித்தபோது அது அவளை மிகவும் தொந்தரவு செய்தது.

ஜான்வி போன்ற பிரபலமான நட்சத்திரக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இன்று சாதாரண குழந்தைகளுக்கும் இணையத்தின் ஆபத்துகளை நாம் அனைவரும் அறிவோம்.

பெற்றோர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கு இந்த சவால்களை எதிர்கொள்ள, இந்தூரில் உள்ள நியூரிக்ஸ் நிறுவனர் போராஸ் பிரதாப் சிங்குடன் பேசினோம், அவர் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான ஆன்லைன் இருப்பை பராமரிப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை வழங்கினார்.

பதின் வயதினரை குறிவைக்க ஆன்லைன் மோசடியர்கள் பயன்படுத்தும் பொதுவான முறைகள்

online safety

பதின்ம வயதினரை ஏமாற்ற ஆன்லைன் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் தந்திரம், பெரும்பாலும் அவர்களைப் போன்ற ஒத்த ஆர்வங்களைக் கொண்ட ஒருவரைப் போலவே, அல்லது சில சமயங்களில் அவர்களின் நண்பர்களாகவும் நடிக்கிறார்கள்.

அவர்கள் ஃபிஷிங் மூலம் கணக்குகளை ஹேக் செய்ய, ஏமாற்றும் மெசேஜேஸ் அல்லது தனிப்பட்ட லிங்க்ஸ் அனுப்பலாம்.

மேலும் அவர்கள் கேட்ஃபிஷர்களாக கூட மாறலாம், அவர்கள் முக்கியமான தகவல் அல்லது புகைப்படங்களை பெறுவதற்கு, வேறொருவரைப் போல நடிப்பார்கள். சைபர்ஸ்டாக்கிங் என்பது இதன் மற்றொரு வடிவமாகும், அங்கு ஸ்கிரினில் டீனேஜரின் செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் அவர்களின் பல தகவல்களைத் தேடுகிறார்கள்.

பதின்ம வயதினருக்கான அறிவுரை

உங்கள் முகவரி, உங்கள் பள்ளி பற்றிய தகவல் அல்லது தொலைபேசி எண்ணை நீங்கள் ஆன்லைனில் நண்பர்களாக ஆக்கும் எவருக்கும் தெரிவிக்க வேண்டாம். உங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் உள்ள தொடர்பு பட்டியலில் புதிய நண்பரைச் சேர்க்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.

உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் மட்டுமே பொருத்தமான பிரைவேசி செட்டிங்ஸ் மூலம் உங்கள் சமூக தளங்களைப் பகிரவும்.

சந்தேகத்திற்கிடமான நடத்தையை, உங்கள் பெற்றோரிடமோ அல்லது மற்றொரு நம்பகமான பெரியவரிடம் உடனடியாகப் புகாரளிக்கவும், மேலும் பிளாட்ஃபார்மில் உங்களுக்குக் கிடைக்கும் ரிப்போர்டிங் டூல்ஸ் பயன்படுத்தவும்.

இளம் பருவத்தினர் ஆன்லைனில் போஸ்ட் செய்யும் தகவல் மற்றும் படங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருமுறை போஸ்ட் செய்துவிட்டால் -அதை இணையத்தில் இருந்து அழிக்க முடியாது.

வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்ட் மற்றும் டூயல் ஃபேக்டர் செக்யூரிட்டி ஆகியவை ஆன்லைன் கணக்குகளை பாதுகாப்பாக லாக் செய்ய உதவும்.

அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பிரைவேசி செட்டிங்ஸ் மற்றும் புதிய அம்சங்களில் ஏதேனும் மாற்றங்கள் குறித்து அப்டேட் ஆக இருக்கவும். எந்த நேரத்திலும் ஆன்லைனில் ஏதேனும் தொடர்புகளால் உங்களுக்கு அசௌகரியம் அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால், பெரியவர்களிடம் தெரிவிக்கவும்.

தங்கள் குழந்தையின் டிஜிட்டல் தடயத்தைக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் பெற்றோர்கள் செயல்படுத்தக்கூடிய பயனுள்ள உத்திகள்

குழந்தையைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். நேரடி தகவல் தொடர்புகளை ஊக்குவிக்கவும். அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் பற்றி பேச அவர்களை கட்டாயப்படுத்துங்கள். Bark, Qustodio, Norton Family போன்ற பேரன்ட் கன்ட்ரோல் பயன்படுத்தி, ஆன்லைனில் செயல்பாடுகளின் கண்காணிப்பு செய்யலாம்.

தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கவும். அவர்கள் இணையத்தில் உலாவ வேண்டிய நேரம் மற்றும் அவர்கள் பார்வையிடும் தளங்களைக் கட்டுப்படுத்தவும். ஒன்றாக சேர்ந்து, அவர்களின் சமூக ஊடக கணக்குகளில் பிரைவேசி செட்டிங்க்ஸ் அமைக்கவும்.

Read in English: Janhvi Kapoor on being sexualised as a teenager: Found photos on what ‘seemed like a pornographic site’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Lifestyle Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment