Advertisment

ஜான்வி கபூர் மாதிரி நீங்களும் உங்க குழந்தைய ரொம்ப பாதுகாப்பா வளர்க்குறீங்களா? எச்சரிக்கும் உளவியல் நிபுணர்

இந்த அதிகப்படியான பாதுகாப்பு சில சமயங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஜான்வி வெளிச்சம் போட்டுக் காட்டினார்

author-image
WebDesk
New Update
Janhvi Kapoor

Janhvi Kapoor

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஸ்ரீதேவி, போனி கபூரின் மகளாக ஸ்பாட்லைட்டில் வளர்ந்த ஜான்வி கபூருக்கு, குழந்தைப் பருவம் என்பது இயல்பான ஒரு விஷயமாக இல்லை.

Advertisment

தி ரன்வீர் ஷோ பாட்காஸ்டின் எபிசோடில், ரன்வீர் அல்லாபாடியாவுடன் ஒரு உரையாடலில், கடுமையாகப் பாதுகாக்கும் பெற்றோரால், வளர்க்கப்பட்டதைப் பற்றி ஜான்வி பேசினார்.

என் அம்மாவும் அப்பாவும் என்னை மிகவும் பாதுகாப்பாக வளர்த்தார்கள்,

அதனால் நான் இன்னும் நிறைய அனுபவங்களைத் தேடுகிறேன் என்று நினைக்கிறேன், ஏனெனில் அது என்னிடமிருந்து விலகப்பட்டதாக நான் உணர்ந்தேன்.

நான் இவ்வளவு வாழ்ந்தேன், பார்த்திருக்கிறேன், நிறைய செய்திருக்கிறேன், அதனால் என் குழந்தைகளுக்கு அவர்கள் எதையும் கடந்து செல்லாமல் வசதியையும் ஆடம்பரத்தையும் கொடுக்க வேண்டும், என்பது என் அம்மாவின் எண்ணம்”.

ஆனால், இந்த அதிகப்படியான பாதுகாப்பு சில சமயங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஜான்வி வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

மருத்துவ உளவியலாளர் நேஹா பராஷர் (clinical psychologist at Mindtalk by Cadabams), அதிக பாதுகாப்பு சூழலில் வளர்வது குழந்தையின் வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை கணிசமாக பாதிக்கும், என்று கூறுகிறார்.

பெற்றோரின் அதிகப் பாதுகாப்பில் இருக்கும்போது, ​​குழந்தைகள் பெரும்பாலும் தன்னம்பிக்கை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை ஊக்குவிக்கும் அத்தியாவசிய அனுபவங்களை இழக்கிறார்கள்.

அவர்கள் முடிவெடுப்பதற்கு தங்கள் பெற்றோரைச் சார்ந்து இருக்கலாம், மேலும் சவால்களை தாங்களாகவே கையாளும் திறனில் நம்பிக்கை இல்லாமல் போகலாம்.

ஆபத்து, சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் சமூக தொடர்புகள் போன்ற முக்கியமான வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதற்கான அவர்களின் திறனை இந்த சூழல் தடுக்கலாம். அதிகப்படியான பாதுகாப்பு, படைப்பாற்றலைத் தடுக்கலாம், குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராய்ந்து புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்தலாம்.

நீண்ட கால உளவியல் விளைவுகள்

பெற்றோரின் அதிக பாதுகாப்பில் வளர்க்கப்படும் குழந்தைகள் பல நீண்டகால உளவியல் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இதில் அதிகரித்த கவலை, குறைந்த சுயமரியாதை மற்றும் தோல்வி பற்றிய பரவலான பயம் ஆகியவை அடங்கும்.

உலகம் ஒரு ஆபத்தான இடம் என்றும், அவர்களால் தனியாகச் செல்ல இயலாது என்றும் தொடர்ந்து வரும் செய்தி, நம்பிக்கை மற்றும் சுதந்திரமின்மைக்கு வழிவகுக்கும்.

Janhvi Kapoor

சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான உத்திகள்

மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்த குழந்தைகளுக்கு, சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் கட்டியெழுப்புவது சவாலானது, ஆனால் சரியான உத்திகள் மூலம் அடையக்கூடியது, என்று பரார் பரிந்துரைக்கிறார்.

சுய விழிப்புணர்வு

அவர்களின் தற்போதைய நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளில் அவர்களின் வளர்ப்பின் தாக்கத்தைப் புரிந்துகொள்வது முதல் படி. அவர்களின் பலத்தை பிரதிபலிப்பது, யதார்த்தமான இலக்குகளை அமைக்க அவர்களுக்கு உதவும்.

கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியேறுதல்

புதிய சவால்கள் மற்றும் பொறுப்புகளை படிப்படியாக எடுத்துக்கொள்வது நம்பிக்கையை வளர்க்கும். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது, பொழுதுபோக்குகளைத் தொடருவது அல்லது தனியாகப் பயணம் செய்வது ஆகியவை இதில் அடங்கும்.

சிக்கலைத் தீர்க்கும் திறன்களை உருவாக்குதல்

தன்னார்வ பணி அல்லது குழு திட்டங்கள் போன்ற முடிவெடுக்கும் மற்றும் கிரிட்டிகல் திங்கிங் தேவைப்படும் செயல்களில் ஈடுபடுவது இந்த திறன்களை மேம்படுத்தும்.

உதவி

கவுன்சலிங் அல்லது சிகிச்சையானது அச்சங்களை ஆராய்வதற்கும் சுதந்திரத்திற்கான உத்திகளை உருவாக்குவதற்கும் பாதுகாப்பான இடத்தை அளிக்கும். இவர்கள் வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் வழங்கலாம்.

சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நண்பர்கள் மற்றும் சகாக்களுடன் இருப்பது, சொந்தம் என்ற உணர்வை அளிக்கும், இது தனிப்பட்ட வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

Read In English: Janhvi Kapoor on her parents being ‘overprotective’: ‘I felt it was kept from me’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Janhvi Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment