ஒரு முறை ஜான்வி கபூருக்கு பிடித்த மாவா பராத்தாவை நீங்களும் ஈசியா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் மைதா மாவு
¼ ஸ்பூன் உப்பு
¼ கப் நெய்
தண்ணீர்
வெறும் கோயா 100 கிராம்
3 ஸ்பூன் தேங்காய் துருவல்
1 ஸ்பூன் டூட்டி ப்ரூட்டி
¼ கப் சர்க்கரை
செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சேர்க்கவும். தொடர்ந்து அதில் உப்பு, நெய், தண்ணீர் சேர்த்து பிசையவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு பாத்திரத்தில் கோயா, தேங்காய் துருவல், டூட்டி ப்ரூட்டி, சர்க்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து மாவை உருண்டைகளாக மாற்றி, மாவை வட்டமாக தேய்க்க வேண்டும். இந்நிலையில் நாம் கலந்து பொருளை வைத்து அதற்கு மேலாக மாவை வட்டமாக வைக்கவும். இதை நாம் எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.