Advertisment

100 வயசு வரை ஆரோக்கியம்: உலகில் நீண்ட காலம் வாழும் மக்களின் 4 காலை பழக்கவழக்கங்கள் இங்கே

ஜப்பானிய ’இகிகை’ யோசனை உங்கள் ஆன்மாவின் ஆர்வத்தைக் கண்டறிந்து ஒரு நோக்கமுள்ள வாழ்க்கையை வாழ்வதாகும்.

author-image
WebDesk
New Update
Lifestyle

Here are 4 morning habits of the longest living people in the world (Image: Freepik)

வெற்றிகரமான நபர்களின் காலைப் பழக்கங்களைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசுகிறோம்.

Advertisment

ஆனால் நீல மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் (இகாரியா, கிரீஸ்; லோமா லிண்டா, கலிபோர்னியா; சர்டினியா, இத்தாலி; ஒகினாவா, ஜப்பான்; மற்றும் நிக்கோயா, கோஸ்டாரிகா), தங்கள் நாட்களை எவ்வாறு தொடங்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த இடங்களில், தனிநபர்கள் பொதுவாக 100 வயது வரை வாழ்கிறார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

நீண்ட ஆயுட்கால ஹாட்ஸ்பாட்கள் (longevity hotspots) குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கிய ஆசிரியரும் ஆய்வாளருமான டான் பட்னர், இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்கள் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் குறிப்பிட்ட வாழ்க்கை முறை நடைமுறைகளை வெளிப்படுத்துவதை தனது பணியாகக் கொண்டுள்ளார்.

இந்த நடைமுறைகளில் ஒன்றிரண்டு காலை எழுந்தவுடன் நீங்கள் பின்பற்றலாம்.

இகிகைLifestyle

காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க உங்களைத் தூண்டுவது எது? குறைந்தபட்சம் ஒரு நீல மண்டலத்தில் வசிப்பவர்கள் பின்பற்றும் நடைமுறைகளில் ஒன்று, உங்களை ஊக்குவிக்கும் எதையும் கண்டுபிடித்து அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வது.

ஜப்பானிய இகிகை யோசனை உங்கள் ஆன்மாவின் ஆர்வத்தைக் கண்டறிந்து ஒரு நோக்கமுள்ள வாழ்க்கையை வாழ்வதாகும்.

சத்தான காலை உணவு

ஆச்சரியப்படத்தக்க வகையில், ஒரு நல்ல காலை உணவு 100 வயது வரை வாழ்வதற்கு முக்கியமானது. பட்னரின் தேடல், அவரை லோமா லிண்டாவில் வசிக்கும் 105 வயது பெண்மணியிடம் அழைத்துச் சென்றது,

அவள், ஒரு கோப்பை நிறைய மெதுவாக சமைத்த ஓட்ஸ் மூலம் தனது நாளைத் தொடங்குகிறாள்.

ஆரோக்கியமான அக்ரூட் பருப்புகள், நார்ச்சத்து அதிகம் உள்ள பேரீச்சம்பழம் மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ள சோயா பால் டாப்பிங்ஸ் உடன் இது மிகவும் எளிமையான காலை உணவாகும். விஷயங்களைத் தொடங்குவதற்கும் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஒவ்வொரு உணவையும் "ப்ரூன் ஜூஸ் ஷூட்டர்" (prune juice shooter) மூலம் அவள் பின்தொடர்கிறாள்.

ஒரு கப் காபி

Coffee

ஐந்து நீல மண்டலங்களில் வசிப்பவர்கள் தங்கள் நாளை, ஒரு சுவையான காபியுடன் தொடங்குகிறார்கள்.

அதற்காக இனிப்பு கிரீம் அல்லது சர்க்கரையால் உங்கள் கோப்பையை நிரப்ப வேண்டும் என்று இல்லை. அதற்கு பதிலாக, பாலுடன் தாவர அடிப்படையிலான பால் சப்ளிமெண்ட்ஸ், ஸ்டீவியா போன்ற நேச்சுரல் ஸ்வீட்னர் தேர்வு செய்யவும்.

டீ, நீல மண்டலங்களில் உள்ள மற்றொரு பொதுவான பானமாகும், எனவே உங்கள் காலை காபியை, ஒரு கப் தேநீருடன் மாற்ற முயற்சிக்கவும்.

அன்பாக இருங்கள்

பட்னர் ஒவ்வொரு காலையிலும் சத்தான உணவை (பழங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்தது) உட்கொள்வதன் மூலமும், 20 நிமிட உடற்பயிற்சியில் (பெரும்பாலும் யோகா அல்லது வேலைக்குச் செல்லும் போது பைக் ரைடு) ஈடுபடும் போதும் மக்களுடன் அன்பாக பேசுகிறார்.

காலையில் நாம் சந்திக்கும் முதல் நபரிடம் ஏதாவது நன்றாகச் சொல்லுங்கள். ஒரு ஹார்வர்ட் ஆய்வு, நடத்தைகள் தொற்றும் என்று காட்டுகிறது, எனவே நீங்கள் அதை உங்கள் அண்டை வீட்டாரிடம் செய்தால், அது உங்களிடம் திரும்பும், என்கிறார் பட்னர்

Read in English: Here are 4 morning habits of the longest living people in the world

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment