கடல் இல்லாமல் இந்த உலகம் இல்லை. நாம் எவ்வளவுதான் நவ நாகரீகமான மாறினாலும் இயற்கைக்கு முன்னால் நாம் அனைவருமே ஒன்றுமே இல்லை. மனிதனின் விஞ்ஞானத்தால் செயற்கையைத் தான் உருவாக்க முடியும். இயற்கை அப்படி இல்லை. அது சில சமயங்களில் நம்பமுடியாத அதிசயங்களை நிகழ்த்தி நம்மை வாயடைக்க செய்கிறது. அதில் ஒன்று தான் கடல்.
கடலை பார்த்து ரசிக்காத யாராவது இந்த உலகத்தில் உண்டா? நீங்கள் பணக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் கடல் தாயின் முன் அனைவரும் சமம் தான். சிலருக்கு கடல் பிடிக்கும். சிலருக்கு மலையும், பனியும் பிடிக்கும்.
சிலர் கரையில் மோதும் அலைகளின் சத்தத்தை விரும்பினாலும், மற்றவர்கள் பனியின் அமைதியில் திளைக்க விரும்புகிறார்கள். ஆனால், இவை அனைத்தையும் நீங்கள் ஒரே இடத்தில் அனுபவிக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், நீங்கள் படித்தது சரிதான்!
பனி, மணல் மற்றும் கடற்கரையின் சங்கமத்தைக் காட்டும் ஜப்பானில் இருந்து ஒரு ஸ்டன்னிங் படம், சமூக ஊடகங்களில் அனைவரையும் மயக்கி விட்டது.
புகைப்படக்கலைஞர் ஹிசா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அந்த அழகிய படத்தில் ஒரு பக்கம் கடல், மறு பக்கம் பனிப்போர்வை. நடுவே மணலில் ஒரு நபர் நடந்து செல்லும் அழகிய காட்சியை நீங்கள் பார்க்கலாம்.
கடல் கரையோரம் ஒரு நடை. ஜப்பான் கடலில் இருந்து ஒரு ஹலோ என்று எழுதி, அந்த மயக்கும் படத்தை ஹிசா பகிர்ந்துள்ளார். பாருங்கள்.
எதிர்பார்த்தது போலவே இந்த படத்தை பார்த்து வியந்த நெட்டிசன்கள், இது பூமியில் உள்ள சொர்க்கம் என்றும், மிக சரியான ஷாட் என்றும் புகைப்பட கலைஞரை பாராட்டினர்.
நான் பார்த்ததில் மிகவும் நம்பமுடியாத, அழகான படங்களில் ஒன்று, என்று ஒரு நெட்டிசன் கூறினார். அது பலரின் உணர்வுகளை எதிரொலித்தது.
ஜப்பானில் இந்த இடம் எங்கே உள்ளது? 2008 இல் ஜப்பானிய ஜியோபார்க் மற்றும் 2010 இல் யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் என அறிவிக்கப்பட்ட சானின் கைகன் ஜியோபார்க்கில் இந்த அரிய நிகழ்வைக் காண முடியும்.
மேற்கு ஜப்பானில் உள்ள இந்த கடற்கரை கிழக்கு கியோகாமிசாகி கேப், கியோட்டோவில் இருந்து மேற்கு ஹகுடோ கைகன் கடற்கரை, டோட்டோரி வரை நீண்டுள்ளது. இது ரியா வகை கடற்கரைகள், மணல் திட்டுகள், எரிமலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த பன்முகத்தன்மை காரணமாக, ஜியோபார்க் சூடோலிசிமாச்சியோன் ஆர்னாட்டம், ரான்குலஸ் நிப்போனிகஸ் மற்றும் சிகோனியா பாய்சியானா (ஓரியண்டல் ஒயிட் ஸ்டோர்க்ஸ்) போன்ற அரிய தாவரங்களுக்கு தாயகமாக உள்ளது.

இது சுமார் 400,000 மக்கள்தொகை கொண்ட மூன்று நகரங்கள் மற்றும் மாகாணங்களை உள்ளடக்கியது. இப்பகுதி மூன்று பெரிய பூகம்பங்களை அனுபவித்ததால், பேரழிவு தொடர்பான இடங்களும் இங்கு உள்ளன. கூடுதலாக, உள்ளூர் சூடான நீரூற்றுகள் நீண்ட காலமாக மக்களின் ஆரோக்கிய ஓய்வு விடுதிகளாகப் பாராட்டப்படுகின்றன.
மேலும் இது துமுளி (tumuli) போன்ற பல வரலாற்று தளங்களையும் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“