3 நாள் ஊற வைத்த பழைய சோறு... மல்லிகைப் பூ ஆயிரக்கணக்கில் பூத்துக் குலுங்க; இப்படி ட்ரை செஞ்சு பாருங்க!
செடிகளுக்கு உரம் கொடுப்பதற்கு முன்பு, அவற்றை கவாத்து செய்வது மிகவும் அவசியம். இப்படி வெட்டி விடுவதன் மூலம், புதிய துளிர்கள் ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்.
செடிகளுக்கு உரம் கொடுப்பதற்கு முன்பு, அவற்றை கவாத்து செய்வது மிகவும் அவசியம். இப்படி வெட்டி விடுவதன் மூலம், புதிய துளிர்கள் ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்.
உங்கள் வீட்டு மல்லிகைச் செடி பல வருடங்களாகியும் பூக்கவில்லையா? கவலை வேண்டாம்! உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சக்திவாய்ந்த உரத்தை தயாரித்து உங்கள் செடியை பூக்க வைக்கலாம்.
Advertisment
மல்லிகைச் செடிக்கு உரம் போடும்போது, அது நேரடி சூரிய ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உரம் போடுவதற்கு முன்பு, மல்லிகைச் செடியின் அனைத்து நுனிகளையும் வெட்டி விடுங்கள். இது புதிய கிளைகள் வளர உதவும், இதன் விளைவாக அதிக பூக்கள் பூக்கும்.
மல்லிகைப் பூச்செடி அதிகமான பூக்களை பூப்பதற்கு என்ன மாதிரியான திரவ உரம் மற்றும் இயற்கை உரம் கொடுக்க வேண்டும், மற்றும் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.
Advertisment
Advertisements
செடிகளுக்கு உரம் கொடுப்பதற்கு முன்பு, அவற்றை கவாத்து செய்வது மிகவும் அவசியம். இப்படி வெட்டி விடுவதன் மூலம், புதிய துளிர்கள் ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்.
ஒரு வாரத்திற்குள் பார்த்தீர்கள் என்றால், நாம் வெட்டிய அனைத்து இடங்களிலுமே நன்றாக துளிர்கள் வந்திருக்கும். இதற்குப் பிறகுதான் நாம் உரம் கொடுக்கத் தொடங்குகிறோம். முதலில் செடியைச் சுற்றியுள்ள களைகளை எல்லாம் நீக்கிவிட்டு, மண்ணை லேசாகக் கிளறி விடவும். பிறகு உங்களிடம் என்ன உரம் இருக்கிறதோ, அதாவது நன்கு மக்கிய கம்போஸ்ட் உரம் ஆகட்டும் அல்லது ஆட்டு எரு போன்ற இயற்கை உரமாக இருந்தாலும் ஒரு கைப்பிடி அளவு செடியின் வேர்ப்பகுதியில் போட்டு நன்றாகக் கிளறி விடுங்கள்.
அதன் பிறகு, தண்ணீர் மட்டும் ஊற்றினால் போதும். அதிலிருந்து பத்து நாட்களுக்குள் பார்த்தீர்கள் என்றால், புதிதாக வந்த துளிர்களில் எல்லாம் சின்னச் சின்ன மொட்டுகள் உருவாக ஆரம்பிக்கும்.
திரவ உரத்தைத் தயாரித்துக் கொடுப்பதற்கு முன்பு, செடிக்கு இரண்டு நாள் பக்கம் தண்ணீர் ஊற்றாமல் விட்டீர்கள் என்றால், மண் தானாகவே காய்ந்து விடும். ஏனென்றால், ரொம்ப தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்து அந்த சமயத்தில் கொடுத்தோம் என்றால், இந்த திரவ உரம் நேரடியாகக் கீழே இறங்கி வந்துவிடும். அதனால், கொஞ்சம் காய வைத்து அதற்கு அப்புறம் கொடுத்தீர்கள் என்றால், ஈஸியாகச் செடி அதை உறிஞ்சிக் கொள்ளும்.