மல்லிகைப் பூச்செடி அதிகமான பூக்களை பூப்பதற்கு அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன் எந்த ஒரு செடியாக இருந்தாலும், நல்ல வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டும்.
Advertisment
மாடித்தோட்டத்தில் உள்ள மல்லிகைச் செடிகள் பூத்து முடிந்தவுடன் அவற்றை கவாத்து செய்வது அவசியம். இது செடி நேராக வளர்வதைத் தவிர்த்து, பக்கவாட்டில் படர்ந்து வளர உதவும். இதனால் அதிக கிளைகள் உருவாகி, அதிக பூக்கள் பூக்கும். கவாத்து செய்யாமல் விட்டால், செடி நேராக வளர்ந்து அதிக கிளைகள் இல்லாமல், குறைந்த பூக்களை மட்டுமே கொடுக்கும்.
பூக்காத மொட்டுகள் இருந்தால் அவற்றை விட்டுவிட்டு, மற்ற பகுதிகளைக் கவாத்து செய்யலாம்.
Advertisment
Advertisements
சமீபத்தில் மழை பெய்வதால், இலைகளை நீக்குவது அவசியம். கவாத்து செய்த பிறகு, இரண்டு இலைகள் கொண்ட கிளைகளை மட்டும் நீக்க வேண்டும். அதாவது, கவாத்து செய்த இடத்திலிருந்து முதல் இரண்டு இலைகளை நீக்குங்கள். இது செடிகள் வேகமாகத் துளிர் விடவும், அதிகப் பூக்களைப் பூக்கவும் உதவும்.
அனைத்து இலைகளையும் நீக்காமல், முதல் இரண்டு இலைகளை மட்டும் நீக்குவது முக்கியம். அனைத்து இலைகளையும் நீக்கினால் செடி காய்ந்து போக வாய்ப்புள்ளது.
கவாத்து செய்த பிறகு
இந்த முறையில் கவாத்து செய்து, இலைகளை நீக்கிய பிறகு, ஒரு வாரத்திற்குள் புதிய துளிர்கள் வர ஆரம்பிக்கும். இலைகள் குறைவாக இருப்பதால், பூக்களுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகச் சென்று செழித்து வளரும். பொதுவாக, கவாத்து செய்தபின் செடி துளிர்விட 10 நாட்கள் ஆகும். ஆனால், இலைகளை அகற்றும் இந்த முறையில் 4-5 நாட்களிலேயே துளிர்விட ஆரம்பிக்கும்.
இருவாட்சி மல்லிகை, முல்லைப்பூ, ரோஸ் மல்லிகை போன்ற மற்ற பூச்செடிகளையும் இதே முறையில் கவாத்து செய்யலாம். பூத்து முடிந்த பகுதிகளை மட்டும் கத்தரித்து விடவும்.