பழைய சோறுடன் கொஞ்சம் நாட்டு வெல்லம்... மல்லி பூத்துக் குலுங்க இந்த உரம்; இப்படி தெளிச்சுப் பாருங்க!

பூக்கள் அதிகமாக பூக்க சத்தான உரம் மிகவும் முக்கியம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது திரவ உரங்களை செடிக்கு இடலாம். பாஸ்பரஸ் சத்து அதிகமுள்ள உரங்கள் பூக்கள் உருவாகுவதற்கு உதவும்.

பூக்கள் அதிகமாக பூக்க சத்தான உரம் மிகவும் முக்கியம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது திரவ உரங்களை செடிக்கு இடலாம். பாஸ்பரஸ் சத்து அதிகமுள்ள உரங்கள் பூக்கள் உருவாகுவதற்கு உதவும்.

author-image
WebDesk
New Update
Jasmine garden

Jasmine Care Tips

வெயில் வந்துட்டாலே போதும், பல செடிகள் சோர்ந்து போய் காய்ஞ்சு தொங்கிடும். ஆனா, கொஞ்சம் அக்கறை காட்டினா, இந்த வெயிலையும் தாண்டி உங்க மல்லியும் ரோஜாவும் புதுப் பூக்களையும் தளிர்களையும் விட்டு அசத்தும்! இதோ சில சூப்பர் டிப்ஸ்:

Advertisment

மல்லிக்கு ஜாலி:

தண்ணி ரொம்ப முக்கியம்: வெயில்ல தண்ணி சீக்கிரம் காஞ்சுடும். அதனால உங்க மல்லிக்கு டெய்லி தண்ணி ஊத்துங்க. செடியோட அடி மண்ணு எப்பவும் ஈரமா இருக்கணும். காலையில இல்லன்னா சாயங்காலமா ஊத்துனா செடிக்கு ரொம்ப நல்லது.

Advertisment
Advertisements

நிழல்னா ரொம்பப் பிடிக்கும்: மல்லிக்கு மிதமான வெயில் போதும். மத்தியானம் வெயில் சுள்ளுன்னு அடிக்கும்போது, செடியை கொஞ்சம் நிழலான இடத்துக்கு மாத்திடுங்க. இல்லன்னா நிழல் வலை கூட போடலாம்.

சத்தான சாப்பாடு: நிறைய பூ பூக்க சத்தான உரம் ரொம்ப முக்கியம். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை நல்லா மக்கிய தொழு உரத்தையோ இல்லன்னா லிக்விட் உரத்தையோ போடுங்க. பாஸ்பரஸ் சத்து இருக்கிற உரம் பூக்கள் உருவாக ரொம்ப உதவும்.

கிளையெல்லாம் கட் பண்ணிடுங்க: காஞ்ச பூக்களையும், தேவையில்லாத கிளைகளையும் வெட்டி விட்டா புது பூக்கள் வர்றதுக்கு ஈஸியா இருக்கும்.
பூச்சித் தொல்லைன்னா வேப்ப எண்ணெய் தான் பெஸ்ட்: வெயில் காலத்துல பூச்சிங்க தொல்லை அதிகமா இருக்கும். டெய்லி செடியை பாருங்க. பூச்சி இருந்தா வேப்ப எண்ணெயை ஸ்ப்ரே பண்ணி விரட்டிடுங்க.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: