6 மணி நேர சூரிய வெளிச்சம்; 2 எலுமிச்சை உரம் இப்படி கொடுத்தால் மல்லிகை செடி பூரா பூ பூக்கும்!
உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் வளர்க்கிற மல்லிகைச் செடியில் கொத்து கொத்தாக செடி பூரா பூ பூக்க வேண்டுமா? அப்படி என்றால், என்ன செய்ய வேண்டும், என்ன உரம் உரம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

ஆர்கானிக் கார்டனிங் டிப்ஸ் (Organic gardening tips) என்ற யூடியூப் சேனலில், மல்லிகை செடியில் கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்க ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர்.
உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் வளர்க்கிற மல்லிகைச் செடியில் கொத்து கொத்தாக செடி பூரா பூ பூக்க வேண்டுமா? அப்படி என்றால், என்ன செய்ய வேண்டும், என்ன உரம் உரம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.
Advertisment
தோட்டத்தில் செடிகளை எப்படி பராமரிப்பது, பூக்காத செடிகளை எப்படி பூ பூக்க வைப்பது என்பது குறித்து ஆர்கானிக் கார்டனிங் டிப்ஸ் (Organic gardening tips) என்ற யூடியூப் சேனலில் பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், மல்லிகை செடியில் கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்க ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
மல்லிகைச் செடியைப் பொறுத்தவரை கவாத்து செய்வது ரொம்ப முக்கியம். அதனால், உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் மல்லிகைச் செடியைக் கவாத்து செய்யுங்கள். நீங்கள் மாடித் தோட்டத்தில் மல்லிகைச் செடியை வளர்க்கிறீர்கள் என்றால், சூரிய வெளிச்சம் ரொம்ப முக்கியம். அதனால், 5-6 மணி நேரம் சூரிய ஓளி கிடைக்கிற இடத்தில் மல்லிகைச் செடியை வையுங்கள். மல்லிகைச் செடியின் மண் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். மல்லிகைப் பூ பூக்கும் சீசன் என்பதால், மல்லிகைச் செடிக்கும் 12 நாள்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு உரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். 20 நாள்களுக்கு ஒருமுறை மண்ணைக் கிளறி செடிகளைச் சுற்றி அரை ஸ்பூன் மஞ்சள் தூள் தூவி விடுங்கள்.
Advertisment
Advertisements
இப்போது எலுமிச்சை லிக்யூட் உரம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். ஒரு 2 லிட்டர் டப்பா எடுத்துக்கொள்ளுக்கள். ஒரு கைப்பிடி அளவு வெங்காயத்தூள் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் வேப்பம் புண்ணாக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன், பயன்படுத்தப்பட்ட எலுமிச்சையின் தோல் ஒன்றை சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அந்த டப்பாவை மூடிவிடுங்கள், பின்னர் அதை நிழல் உள்ள இடத்தில் வைத்து 2 நாட்கள் ஊற வையுங்கள். இப்போது நன்றாகக் கலக்கிவிடுங்கள். அதை வடிகட்டி, அந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் அரை டம்பளர் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீர் அரை டம்பளர் சேர்த்து செடிக்கு ஊற்றுங்கள். செடியின் அளவைப் பொறுத்து தண்ணீரின் அளவைக் கூட்டி பயன்படுத்தலாம். இந்த எலுமிச்சை தண்ணீரை ஒரு மாதத்திற்கு ஒருமுறைதான் செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இப்படி செய்தால், மல்லிகைச் செடி பூரா கொத்துக் கொத்தாக பூ பூக்கும். உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.