Javvarisi Payasam Recipe Javvarisi Payasam Recipe in Tamil
Javvarisi Payasam Recipe , Javvarisi Payasam Recipe in Tamil : மதிய வேளையில் வடை பாயாசத்துடன் சமைக்கும் போது, அப்போது சேமியா பாயசம் செய்வதற்கு பதிலாக, ஜவ்வரிசி கொண்டு பாயாசம் செய்தால், அது வித்தியாசமானதாக இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஏனெனில் ஜவ்வரிசியில் ஊட்டச்சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன.
முதலில் ஜவ்வரிசியை நீரில் போட்டு, நன்கு பெரியதாகும் வரை, குறைந்தது 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். குங்குமப்பூவை 1 டேபிள் ஸ்பூன் பாலில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து பாலை ஓரளவு சுண்ட வைக்க வேண்டும்.
பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, ஜவ்வரிசி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். ஜவ்வரியானது நன்கு வெந்ததும், ஊற வைத்துள்ள குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும். பின் அதில் நட்ஸ், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி பாயாசம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil