ஜீன்ஸ் பேன்ட் என்பது நம்மில் பலரின் அன்றாட உடைகளில் ஒன்றாக இருக்கிறது. இதை முறையாகப் பராமரித்தால் நீண்ட நாட்களுக்குப் புதியது போலவே இருக்கும். சீக்கிரமாக நிறம் மங்காமலும், கிழிந்து போகாமலும் இருக்க ஒரு எளிய வழி இருக்கிறது!
வினிகர் வாஷ்
Advertisment
நம்ம ஜீன்ஸ் பேன்ட்டைத் துவைக்கும் போது, அதை நீடித்து உழைக்கச் செய்ய வினிகர் ஒரு சிறந்த தீர்வாகும். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், துணியின் நிறம் மங்குவதைத் தடுப்பதோடு, இழைகளை பலப்படுத்தவும் உதவுகிறது. இதனால் துணி சீக்கிரம் அமையாமல், நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
ஒரு வாளியில் அல்லது பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 4 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரைச் சேர்க்கவும். இந்த வினிகர் கலந்த தண்ணீரில் உங்க ஜீன்ஸ் பேன்ட்டை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும். ஊறிய பிறகு, வழக்கம் போல் துவைத்துக் காய வைக்கவும்.
Advertisment
Advertisements
இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்க ஜீன்ஸ் பேன்ட் எப்போதுமே புதிது போல பளபளப்பாக இருக்கும். மேலும், கிழிந்து போகும் வாய்ப்புகளும் குறையும். இனி உங்க ஃபேவரைட் ஜீன்ஸை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம்!