Advertisment

சுகரை குறைக்க சீரகம்... இப்படி யூஸ் பண்ணுங்க!

சீரகம் நம் உணவில் சேர்த்துக்கொள்வதால், அதன் சுவை அதிகரிக்கும். இந்நிலையில் இதில் அதிகமாக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை சீராக்கும். ஜீரணக் குழாயை மிரதுவாக்கும். வயிறு உப்புதல், மலச்சிக்கலை தீர்க்கும்.

author-image
WebDesk
New Update
சீரகம்

சீரகம்

சீரகம் நம் உணவில் சேர்த்துக்கொள்வதால், அதன் சுவை அதிகரிக்கும். இந்நிலையில் இதில் அதிகமாக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை சீராக்கும். ஜீரணக் குழாயை மிரதுவாக்கும். வயிறு உப்புதல், மலச்சிக்கலை தீர்க்கும்.

Advertisment

சாப்பிடுவதற்கு முன்பாக இருக்கும் சர்க்கரை அளவை,  டைப் 2 சர்க்கரை நோய் இருக்கும் நபர்களுக்கு குறைக்கும் பண்புகள் சீரகத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது.

சீரகத்தில் குமின் ஆல்டிஹைட் உள்ளது. இது சுகர் நோய்க்கு எதிராக பண்புகளை கொண்டது. சீரகத்தில் தைமோக்யூனோன் உள்ளது. இவை கணையத்தில் உள்ள பி செல்கள் சேதமடைவதை தடுக்கும். இந்நிலையில் இது இன்சுலின் உற்பத்தியை உடலில் தூண்டும், இவை ரத்த சர்க்கரை அளவை சீராக்கும்.

சீரகத்தை நாம் அப்படியே அல்லது பவுடர் செய்து சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை சீராக்கும். இவை ரத்த குளுக்கோஸ் அளவை சீராக வைத்துகொள்வதோடு நல்ல உடல் எடையை வைத்துகொள்ள உதவுகிறது. இது எல்.டி.எல் அளவை குறைக்க உதவும். வீக்கத்திற்கு எதிரான பண்புகள் இதில் உள்ளது. இவை சுகர் பேஷண்ட்களுக்கு பக்க விளைவுகளாக இதய நோய் ஏற்படும். இந்நிலையில் இந்த பண்புகள் இதய நோய் ஏற்படுவதை தடுக்கும்.

இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது செல்களை சேதப்படுத்துதலில் இருந்து காப்பாற்றும். சுகர் பேஷண்ட்ஸ் இந்த சிக்கல் தொடர்ந்து எழுவதை சரி செய்யும்.

சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 50 முதல் 100 மில்லி கிராம் பச்சை சீரக எண்ணெய் பயன்படுத்தும்போது, சாப்பிடுவதற்கு முன்பாக இருக்கும் ரத்த சர்க்கரை குறைந்துள்ளது. மேலும் சுகர் நோயால் ஏற்படும், மற்ற நோய்கள் குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இனியொரு ஆய்வில், ரத்த குளுக்கோஸ் அளவை குறைப்பதோடு சீரான உடல் எடையை காப்பாற்ற உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் , பிளாஸ்மா லிப்பிட் ப்ரோபைலை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய் மற்றும் இதயம் செயலிழக்கும் தன்மையை இது போக்குகிறது.

இந்நிலையில் நாம் உணவில் எப்படி சேர்த்து கொள்வது என்பதை தெரிந்துகொள்வோம்.  

  • நாம் சாப்பிடும் காய்கறி மற்றும் மாமிசத்தில் இதை கலந்து எடுத்துகொள்ளலாம்.
  • 1 ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் சேர்த்து அதை கொதிக்க வைத்து பாதியாக்கி டீ போல் குடிக்கலாம்.
  • தயிர் அல்லது மோரில் சீரகப் பொடியை சேத்துக் குடிக்கலாம்.
  • நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு 1 ஸ்பூன் வறுத்த சீரகத்தை சாப்பிடலாம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment