காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தை ஊறவைத்த தண்ணீர் குடித்தால் அதிக நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இரவில், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
உடல் வரட்சியை இதுபோக்கும். நாள் முழுவதும் வரட்சியை ஏற்படாமல் தடுக்கும்.
ஜீரண பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டால் இந்த தண்ணீர் பயன்படும். இதில் உள்ள ஜீரணிக்கும் என்சைம் வயிறு உப்புதல், வயிற்று வலி மற்றும் அஜீரணத்தை ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
உடல் இயக்கத்தை தொடங்க உதவும். இதனால் கொழுப்பு எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும். இதில் ஒரு குறைந்த கலோரிகள் கொண்ட பானமாக இருக்கும்.
அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கும். சரியான நேரத்தில் பசி ஏற்பட உதவும். மாதவிடாய் சீராக ஏற்பட உதவுகிறது. குறிப்பாக பி.சி.ஓ.எஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது உதவியாக இருக்கும். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும்.
அஜீரணம் ஏற்படும் போது கடுமையான வயிற்று வலி ஏற்படும். இந்நிலையில் இதை சீரகத் தண்ணீர் குறைக்க உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“