செம்ம சுவையான ஜிலேபி ரெசிபி, ஒரு முறை நீங்கள் செய்து பாருங்க.
தேவையானப் பொருட்கள்
1 கப் - ஆல் பர்பஸ் மாவு அல்லது மைதா
2 டீஸ்பூன் - நெய்
1 தேக்கரண்டி - பேக்கிங் பவுடர்
1/4 டீஸ்பூன் - ஃபுட் கலர்
1 கப் - நீர்
பாகு காய்ச்ச...
1 கப் - சர்க்கரை
1 கப் - நீர்
2 – ஏலக்காய்
செய்முறை
பாகு தயாரிப்பதில் இருந்து இந்த செயல்முறையை தொடங்குங்கள். கயாடில் ஒரு கப் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் மற்றும் 2 ஏலக்காய் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருங்கள், இறுதியில் தெளிவான சர்க்கரை பாகு கிடைக்கும்.ஒரு பாத்திரத்தில், மைதா, 2 டீஸ்பூன் நெய், பேக்கிங் பவுடர் மற்றும் ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்க்கவும். இவற்றை நன்றாக கலக்கவும்.
இந்த கலவையில் தண்ணீரைச் சேர்த்து, அது தண்ணீர் பேஸ்ட்டாக மாறும் வரை கலக்கவும். பின்னர் முனை கொண்ட ஒரு பாட்டிலுக்கு அந்த கலவையை மாற்றவும். நடுத்தர வெப்பத்தில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் சூடானதும், அதில் ஜிலேபிகளை பிழியவும். அவை பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை பொரிக்கவும். ஜிலேபி வெந்ததும், அவற்றை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும். 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, பின்னர் தட்டுக்கு மாற்றவும்.