கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – தன்னையே அர்ப்பணித்தவரின் உணர்ச்சிகர வீடியோ

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில், முன்னணி நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. மனித சோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர் அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

By: March 20, 2020, 3:37:29 PM

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில், முன்னணி நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. மனித சோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர் அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

The First Trials Of Coronavirus Vaccine

Here's a look at the first human trial of a coronavirus vaccine. ????

Brut India यांनी वर पोस्ट केले मंगळवार, १७ मार्च, २०२०

கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மருந்து கண்டுபிடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்த 43 வயது பெண்ணின் வீடியோ, அனைவரும் இதுபோன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் உள்ள கைசர் பெர்மனென்டே வாஷிங்டன் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை மனிதர்களில் பரிசோதிக்க அந்த மையம் விரும்பியது. இதனையடுத்து அறிவிப்பு வெளியிட்டது. பலரும் தயங்க, 43 வயதான ஜெனிபர் ஹேலர் என்ற பெண் முன்வந்து பரிசோதனையை ஏற்றுக்கொண்டார். 43 பேர் இந்த ஆய்வில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்தை உருவாக்கிய குழுவின் தலைமை மருத்துவர் ஜேக்சன் கூறியதாவது, இந்த மருந்து முதன்முதலாக மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மரபியல் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த சோதனையில் பங்கேற்பவர்கள் மக்களின் எதிர்கால நலனை கருதி இந்த அசாத்திய முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மனிதர்களில் உட்செலுத்தப்படும் இந்த மருந்து வைரசின் புரதத்தை பல்கிப்பெருக செய்து அதன்மூலம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கண்காணிக்க டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த மருந்து பலனளிக்கும்பட்சத்தில், 12 முதல் 18 மாத கால அளவில் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Jennifer haller clinical trial coronavirus vaccine coronavirus pandemic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X