உங்கள் அம்மா ஸ்ரீதேவி இதையெல்லாம் கற்றுக் கொடுக்கவில்லையா? ஜான்வியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

நடிகை ஜான்வி அணிந்திருந்த ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் அணிந்திருந்த ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் ஜான்வியை சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜான்வி  ஆடை:

தென்னிந்திய சினிமாவில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.  எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய் என  மூன்று தலைமுறைகளுடனும் நடித்தவர். 16 வயதினிலே திரைப்படம் ஸ்ரீதேவியின் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்.

4 வயதில் சினிமாவில் காலெடி எடுத்து வைத்த இவர் தனது 54  ஆவது வயதில்   உலகை விட்டு பிரிந்தார். ஸ்ரீதேவியின் திரையுலக பங்களிப்பு  காலத்தால் என்றுமே  அழியாதவை.

ஸ்ரீதேவியின் இறப்பு திரையுலகத்திற்கும் மட்டுமில்லை அவரின் குடும்பதாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரின் செல்ல மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரண்டு பெண்களும்  அம்மாவை இழந்தது மிகப் பெரிய துயரம் என்று பல மேடைகளில் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியின் அறிமுகப்படமான ‘த்டாக்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது. படத்தில் அவரின் நடிப்பு  ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர்.  இதற்கு  ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தகுந்த பதிலையும் அளித்திருந்தார்.

ஸ்ரீதேவி உயிருடன் இருந்த காலத்திலும் சரி, அவர் மறைந்த பின்பு சரி அவரின் செல்ல மகள் ஜான்வி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.  ஸ்ரீதேவிக்கு தெரியாமல் அவர்  ஆண்கள் நண்பர்களுடன் பழக்கம்,   பார்ட்டி என அதிகம் சுற்றி திரிந்தது பாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

அதே நேரத்தில் ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின்னர்,  பாலிவுட்  பிரபலங்கள் அனைவரும் ஜான்வி மற்று அவரின் தங்கை குஷி இருவருக்கு ஆதரவாக கைக்கொடுத்து  சோகத்தில் இருந்து தூக்கினர். இந்நிலையில்,  அவர் அணிந்திருந்த ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜான்வி .

ஜான்வி அணிந்திருந்த ஆடை

ஜான்வி மிகவும் கம்மியான ஆடை ஒன்றை அணிந்துக்  கொண்டு வெளியே சென்று வந்துள்ளார்.   இந்த காட்சிகளை ரசிகர் ஒருவர் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த ஆடையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டும்,  ஜான்விக்கு நெட்டிசன்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close