நாடு முழுவதும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் நியாய விலைக் கடை மூலமாக பொது மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உணவுப் பொருட்கள் வழங்கி வருகின்றன.
அரசின் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், உப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடையில் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. மாதம் ஒரு முறை இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில அரசு தீபாவளியை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பச்சை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் இருமுறை ரேஷன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இம்மாதம் முதல் இது செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“