ஜியோ வாடிக்கையாளரா நீங்க?. ஏடிஎம்லயே இனி ரீசார்ஜ் பண்ணலாம். எந்தெந்த ஏடிஎம்களில் இது சாத்தியம்?.
வாடிக்கையாளர்கள் ATM menu விலிருந்து ரீசார்ஜ் தேர்வை தேர்ந்தெடுத்து on-screen வழிமுறைகளை பின் தொடர வேண்டும். பரிவர்த்தனை முடிந்த உடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும்.
வாடிக்கையாளர்கள் ATM menu விலிருந்து ரீசார்ஜ் தேர்வை தேர்ந்தெடுத்து on-screen வழிமுறைகளை பின் தொடர வேண்டும். பரிவர்த்தனை முடிந்த உடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும்.
reliance jio, jio, jew new plans, jio, jio atm plans, jio atm recharge plans, jio bank offers, jio features, corona virus, lockdown
ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இப்பொது தங்களது பிரீபெய்ட் கைபேசி எண்ணை தங்களுக்கு அருகிலுள்ள ஏடிஎம் மில் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். ரிலையன்ஸ் நிறுவனம் இந்த தகவலை ஒரு டிவீட் (tweet) மூலம் வெளியிட்டுள்ளது. கோவிட் -19 ஊரடங்கு நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுடன் இணைந்திருப்பதற்காக மாற்று வழியை வழங்குகிறது. இந்தியா முழுவதும் 9 பங்கேற்கும் வங்கிகளுக்கு பிரீபெய்ட் எண்ணை redeem செய்யும் வசதி உள்ளது. வாடிக்கையாளர்கள் ATM menu விலிருந்து ரீசார்ஜ் தேர்வை தேர்ந்தெடுத்து on-screen வழிமுறைகளை பின் தொடர வேண்டும். பரிவர்த்தனை முடிந்த உடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
இந்திய ஸ்டேட் வங்கி (State Bank of India), ஆக்ஸிஸ் (Axis) வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, சிட்டி வங்கி, DCB வங்கி, AUF வங்கி மற்றும் Standard Chartered வங்கி ஆகிய 9 வங்கிகள் ஜியோ எண்ணை ரிசாரஜ் செய்யும் வசதியை அனுமதிக்கிறது. வாடிக்கையாளர்கள் ரீசாரஜ் தேர்வை மெனுவிலிருந்து தேர்ந்தெடுத்து கைபேசி எண்ணை உள்ளீடு செய்து ஏடிஎம் பின் (ATM Pin) எண்ணையும் உள்ளீடு செய்ய வேண்டும். அதோடு வாடிக்கையாளர் ரீபன்டுக்கான விலையை முடிவு செய்ய வேண்டும். உறுதிபடுத்தல் கொடுத்தவுடன் தொடர்புடைய தொகை வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
வரும் நாட்களில் இந்த வசதி மற்ற வங்கி ஏடிஎம்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 9 வங்கிகளுக்கும் மொத்தமாக 90,000 ஏடிஎம் கள் உள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்ய இவை உதவும்.
இந்திய ஸ்டேட் வங்கி இந்தியாவில் மிகப்பெரிய ஏடிஎம் நெட்வொர்க்கை இயக்குகிறது நாடுமுழுவதும் அதற்கு 50,000 ஏடிஎம் கள் உள்ளன, ஐசிஐசிஐ வங்கிக்கு 15,589 ஏடிஎம் கள் உள்ளன, அதேபோல் ஹெச்டிஎப்சி வங்கிக்கு 14,533 க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன, ஆக்ஸிஸ் வங்கிக்கு 11,800 க்கும் அதிகமான ஏடிஎம்கள் உள்ளன.
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அரசுக்கு பல வழிகளில் ஆதரவு அளித்து வருகிறது. தனது வாடிக்கையாளர்களை ஊரடங்கு நாட்களில் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil