எடை குறைப்பு என்று வரும்போது, ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் இரண்டும் பயனுள்ள இதய பயிற்சிகள் தான். அதன் மூலம் கலோரிகளை பெற முடியும் , கொழுப்பைக் குறைக்கும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்த உதவும். இருப்பினும், இரண்டும் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன.
டெல்லியில் உள்ள CK பிர்லா மருத்துவமனை மருத்துவர் சுரேந்தர் பால் சிங் இதுபற்றி கூறியுள்ளார்.
எடை குறைப்புக்கு ஜாகிங்
ஜாகிங் என்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சியாகும், இது பொதுவாக சைக்கிள் ஓட்டுவதை விட வேகமாக எடை குறைப்பிற்கு வழிவகுக்கும் என்று டாக்டர் சிங் கூறினார். ஏனென்றால், ஜாகிங் செய்யும் போது முழு உடல் ஈடுபாடு காரணமாக ஒரு நிமிடத்திற்கு அதிக கலோரிகளை பெற முடியும்.
உதாரணமாக, 70 கிலோ எடையுள்ள ஒரு நபர் 30 நிமிட ஜாகிங் செய்தால் சுமார் 400 கலோரிகளை எரிக்க முடியும், அதே நேரத்தில் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டும்போது 300 கலோரிகளை எரிக்க முடியும்.
இருப்பினும், இது மூட்டுகளில், குறிப்பாக முழங்கால்கள், இடுப்பு மற்றும் கணுக்கால்களில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், இது osteoarthritis, தசைநார் காயங்கள் போன்ற பிரச்சனைகள் உள்ள நபர்களுக்கு இது பொருந்தாது என்று டாக்டர் சிங் கூறினார்.
எடை குறைப்புக்கு சைக்கிளிங்
சைக்கிளிங் செய்வது மூட்டுகளுக்கு மென்மையாக இருக்கும். அதே நேரம் குறைந்த தாக்கத்தை கொண்டிருக்கும் உடற்பயிற்சியாகும், இது மூட்டு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அல்லது காயத்தில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
சைக்கிள் ஓட்டுதல் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு ஜாகிங் செய்வதை விட குறைவான கலோரிகளை கொடுக்கும். அதே வேளையில், நீண்ட காலத்திற்கு அல்லது அதிக தீவிமாக சைக்கிளிங் செய்யும் போது, இது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் சிங் கூறினார்.
எது சிறந்தது?
ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகிய இரண்டும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும், ஆனால் சிறந்த விருப்பம் உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி அளவைப் பொறுத்தது என்று டாக்டர் சிங் கூறினார்.
விரைவான எடை குறைப்பு: மூட்டு பிரச்சனைகள் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருந்தால், , ஜாகிங் அதிக கலோரிகளை கொடுக்கவும், விரைவாக எடை குறைக்கவும் உதவும்.
Joint-Friendly Weight Loss: உங்களுக்கு முழங்கால் அல்லது மூட்டு பிரச்சினைகள் இருந்தால், சைக்கிள் ஓட்டுதல் ஒரு பாதுகாப்பான, குறைந்த தாக்கம் கொண்ட ஆப்ஷனாகும், இது இன்னும் கலோரிகளை எரிக்கிறது மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“