மழைக் காலத்தில், பலர் மூட்டு ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இந்த வலி உடலில் உள்ள வாதம் அல்லது காற்றின் விகிதத்தில் சமநிலையின்மையால் ஏற்படுகிறது என்று ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் மனிஷா மிஸ்ரா கூறினார்.
ஆனால் இதற்கு உதவக்கூடிய இரண்டு தீர்வுகள் உள்ளன.
ஒன்று சுக்கு டீ. இது வாதத்தை குறைக்க உதவும் ஒரு கஷாயம். தண்ணீருடன் சுக்கு பொடியை கொதிக்க வைத்து, தினமும் காலை மற்றும் மாலை இருமுறை சாப்பிடுங்கள், என்று டாக்டர் மிஸ்ரா கூறினார்.
மற்றொரு தீர்வு, வலி உள்ள இடத்தில் விளக்கெண்ணெயை தடவுவது.
குளிர், ஈரமான மற்றும் மாறுபட்ட வானிலை நிலைகள், வாத தோஷத்தை அதிகரிக்கின்றன, இது உடலில் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு மூட்டுகளில் ஈரப்பதத்தை இழக்கச் செய்கிறது, இதனால் பிடிப்பு, வீக்கம், மூட்டு வலி, தசை வலிகள் மற்றும் விறைப்பு ஏற்படுகிறது, என்று ஷ்லோகா கூறினார். (classical hatha yoga teacher and lifestyle expert)
இந்த வைத்தியம் வேலை செய்யுமா?
டாக்டர் மிஸ்ரா பரிந்துரைத்த வைத்தியங்களுடன் உடன்படும் ஷ்லோகா, சூடான விளக்கெண்ணெய்யில் நனைத்த சுத்தமான துணியை, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது உதவலாம் என்று பகிர்ந்து கொண்டார்.
ஒரு நாளைக்கு 1-2 முறை, 30-45 நிமிடங்கள் இதை செய்யவும். இது வீக்கத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
ஷ்லோகா பரிந்துரைத்த மற்ற வைத்தியங்கள்
கடுகு எண்ணெய் மசாஜ்
சிறிது கடுகு எண்ணெயை சூடாக்கி, பாதிக்கப்பட்ட தசைகள் அல்லது மூட்டுகளில் மெதுவாக மசாஜ் செய்யவும். கூடுதல் வலி நிவாரணத்திற்காக யூகலிப்டஸ் அல்லது பெப்பர்மின்ட் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களின் சில துளிகளைச் சேர்க்கவும்.
இந்த மசாஜ் தினமும், குறிப்பாக தூங்கும் முன், வலியை தணிக்க செய்ய வேண்டும்.
வெந்தயம்
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து பேஸ்டாக அரைக்கவும். பாதிக்கப்பட்ட பகுதியில் பேஸ்ட்டை தடவுங்கள், சுத்தமான துணியால் மூடவும்
30-60 நிமிடங்கள் விட்டு, பின்னர் கழுவவும். இது வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
ஹெர்பல் கம்பிரஸ்
தண்ணீரைக் கொதிக்கவைத்து, இஞ்சி, மஞ்சள் அல்லது அஸ்வகந்தா போன்ற ஒரு சில மூலிகைகளை ஊற வைக்கவும். மூலிகை டிகாஷனில் சுத்தமான துணியை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்
20-30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஒரு நாளைக்கு 1-2 முறை இதை செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“